வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை வதந்தியைப் பரப்பிய பிஜேபி பிரமுகருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை வதந்தியைப் பரப்பிய பிஜேபி பிரமுகருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

மதுரை, மார்ச் 16- ‘தமிழ்நாட் டில் வடமாநில தொழி லாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய உத் தரப்பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளரால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் சூழல் உருவானது. இத்தகைய செயல்களை ஏற்க முடி யாது’ என்று உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய விவகாரத் தில், உத்தரப்பிரதேச பாஜக செய்தித் தொடர் பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்திய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தனக்கு முன்பிணை கேட்டு பிரசாந்த்குமார் உம்ராவ், டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இம் மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், ‘பிர சாந்த் உம்ரா மீது தமிழ் நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் முறையிட்டு நிவாரணம் பெறலாம்’ என உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, பிரசாந்த் குமார் உம்ராவ் முன்பிணை கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் மனு தாக்கல் செய் தார். இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு 14.3.2023 அன்று விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் அன்புநிதி ஆஜராகி, ‘‘மனுதாரரின் சமூக வலைதளப்பதிவை 5 லட்சம் பேர் பார்த்துள் ளனர். அவரது செயலால் தமிழ்நாடு முழுவதும் சட் டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உரு வானது. கடந்த 3ஆம் தேதி பீகாரைச் சேர்ந்த 15 தொழிலாளர்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருந்ததாகவும், அதில், 12 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், 3 பேர் தப்பி சென்றதாகவும், தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்க ளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் டிவிட் டரில் பகிர்ந்துள்ளார். அரசியல் காரணங்களுக் காக தெரிந்தே பகிரப் பட்டுள்ளது.

இவரது செயலால் ஏராளமான தொழிலா ளர்கள் சொந்த ஊருக்கு ரயிலில் புறப்படும் நிலை ஏற்பட்டது. இவரிடம் விசாரணை நடத்த வேண் டியது அவசியம். எனவே, மனுதாரருக்கு முன் பிணை வழங்கக் கூடாது. காவல்துறையினர் தரப் பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்’’ என் றார்.

மனுதாரர் வழக்கு ரைஞர் ஆர்.ஆனந்த் ஆஜ ராகி, ‘‘மனுதாரர் அவராக கருத்து பதிவு செய்ய வில்லை. பீகார் மாநில ஊடகங்களில் வெளி யான செய்தியைத்தான் மறுபகிர்வு செய்துள்ளார். இதில், எந்த உள் நோக்கமும் கிடையாது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, மனுதரரரின் செயலால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச் சினை ஏற்படும் சூழல் உருவானது. இத்தகையை செயல்களை ஏற்க முடி யாது. என்ன நோக்கத் திற்காக பகிரப்பட்டது என்பதையும் பார்க்க வேண்டும். எனவே, மனுவுக்கு தூத்துக்குடி காவல் துறையினர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசார ணையை மார்ச் 17க்கு தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment