மக்களுக்கு விரைவில் தீர்ப்பு கிடைக்க தொழில் நுட்பத்தை விரைவுபடுத்த வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

மக்களுக்கு விரைவில் தீர்ப்பு கிடைக்க தொழில் நுட்பத்தை விரைவுபடுத்த வேண்டும்

உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி வலியுறுத்தல்

புதுடில்லி, மார்ச் 13 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 18-ஆவது கூட்டம் டில்லியில் கடந்த 10.3.2023 அன்று தொடங்கியது.   

கூட்டத்தில் ‘‘ஸ்மார்ட் நீதிமன் றங்கள் மற்றும் நீதித்துறையின் எதிர் காலம்’’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நீதித்துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இ-நீதிமன்றங்கள் உருவாக்கப் பட்டன.

இதனால் நீதித்துறை திறம் படவும், வெளிப்படைத் தன்மை யுடனும் செயல்படுகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள், தேவையான டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்கின. மூன்றாம் கட்ட பணி, நடை முறைகளை எளிதாக்கி, நீதித்துறை சேவைகளை மக்களை சென்ற டைவதை அதிகரிக்கும்.

நீதி என்பது அத்தியாவசிய சேவை என்பதற்கு ஏற்றாற் போல் ஸ்மார்ட் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ் வொருவருக்கும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். இதை கருத்தில் கொண்டு மக்களுக்கும், நீதித் துறைக்குமான இடைவெளியை குறைக்க நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். கரோனா பெருந்தொற்று காலத்தில் டிஜிட் டல் பயன்பாடு நன்கு உணரப் பட்டது. 

இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார்.


No comments:

Post a Comment