முகத்திரை கிழிந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

முகத்திரை கிழிந்தது

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களைப் பற்றி காஷ்மீர் விவகாரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் போலி யானவை என்று லண்டனின் தி கார்டியன் ஏடு வெளியிட்டு பிரதமர் மோடியின் முகத்திரையை கிழித்துள்ளது . இந்தியாவிற்கு காந்தியார், பண்டித நேருவால் விடுதலை கிடைத்தது, அதுபோல  காஷ்மீருக்கு சிறப்பு தகுதியை திரும்ப பெறுவதாக அறிவித்து ஏதோ  தம்மால் தான் நாட்டிற்கே  மீண்டும் பெரிய விடுதலை பெற்று தந்தது போல ஒரு தற்பெருமை. 

'இந்திய விடுதலையின் போது ஆங்கிலேயர் களிடம் மன்னிப்புக் கடிதங்களை பலமுறை எழுதிய சவார்க்கார் வழிவந்த கூட்டமல்லவா இது.' 

உண்மையை மறைத்து குற்றம் சொல்லி  அதன் மூலம் வெற்றி பெற்றதாக தற்பெருமையை தேடித்திரிகிறது மோடி அரசு. 

இந்திய ராணுவ அதிகாரியின் கடிதமும், பிரதமர் நேரு அவர்களின் பதில் கடிதத்தையும் மறைத்து, உண்மையை வெளிக்கொணராமல் மறைத்துள்ளது மோடி அரசு. 

'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்' என்பது போல மோடியின் முகத்திரை கிழிந்து, லண்டனின் 'தி கார்டியன் ஏட்டின்' தகவலால் உண்மை வெளி வந்துள்ளது. 

இந்திய ராணுவ அதிகாரி பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும், நேரு அவர்கள் அதற்கு பதிலாக எழுதிய கடிதத்தையும் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு உண்மை என்றும் உறங்காது என மெய்பித்துள்ளது 'தி கார்டியன் ஏடு'. 

சவார்க்கார், கோட்சேவை புகழும் இந்த வர்ணாசிரம வாதிகளுக்கு நேருவின் செயல் கசக்கத்தான்  செய்யும். 

'பொய்கள்  எவ்வளவு இனித்தாலும் மெய்கள் காலம் தாழ்த்தி வெல்லும்' என்பதையே இந்த கடிதங்கள் பற்றிய தகவல்கள் நிரூபிக்கின்றன.

- மு.சு. அன்புமணி 

மதுரை - 625020


No comments:

Post a Comment