குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் தேர்வாணையம் அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் தேர்வாணையம் அறிவிப்பு!

சென்னை, மார்ச் 11- குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோ றும் குரூப் 4 தேர்வு நடத் தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்க்காணல் எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக் கப்பட்டு வருவதால், இதற்கு தேர்வர்கள் மத்தி யில் அதிகம் வரவேற்பு காணப்படும்.  அதன்படி, 7,301 காலி பணியிடங் களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை 18 லட் சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதை யடுத்து தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  

ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமான நிலையில், 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால் அப்போதும் தேர்வு முடி வுகள் வெளியாகவில்லை. மீண்டும் மார்ச் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளி யாகும் என்று அறிவிக்கப் பட்டது. 

இதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் தொடங்கி ஒரு வாரம் முடிந்த நிலை யில் தேர்வு முடிவுகள் வெளியாகததால், #WeWantGroup4Results  என்னும் ஹேஷ்டேக் 8.3.2023 அன்று இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந் நிலையில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளி யாகும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணை யம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment