இந்தியாவில் ‘ஞாபகமறதி நோய்' பெருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

இந்தியாவில் ‘ஞாபகமறதி நோய்' பெருக்கம்

புதுடில்லி, மார்ச் 11- இந்தியா வில் ஒரு கோடி முதியோ ருக்கு ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள் ளது.

அமெரிக்காவில் உள்ள சுர்ரே பல்கலைக் கழகம், தெற்கு கலிபோர் னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழ கம் மற்றும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து முதியோர் குறித்து ஒரு ஆய்வு நடத் தினர். உலகிலேயே முதல் முறையாக செயற்கை நுண் ணறிவு மாதிரி ஒன்றை உருவாக்கி, அதன் அடிப் படையில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதற் காக 31 ஆயிரத்து 477 முதியோரை ஆய்வுக்கு பயன்படுத்தினர். இதில் கிடைத்த முடிவுகள், ஒரு மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள் ளன. 

அதன்படி, இந்தியா வில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோரில் 1 கோடியே 8 லட்சம் பேருக்கு 'டெமன்ஷியா' என்ற ஞாபகமறதி நோய் இருக் கலாம் என்று தெரிய வந்துள்ளது. இது இந்திய மக்கள்தொகையில் 8.44 சதவீதம் ஆகும். அதே சம யத்தில், அமெரிக்காவில் 8.8 சதவீதம் பேருக்கும், இங்கிலாந்தில் 9 சதவீதம் பேருக்கும், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுக ளில் 8.5 முதல் 9 சதவீதம் பேருக்கும் இந்நோய் இருக்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. 

மேலும், 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வில் 60 வயதை தாண்டி யவர்களில் கணிசமா னோருக்கு ஞாபகமறதி நோய் ஏற்படும் என்றும், அதாவது இந்தியாவின் மொத்த மக்கள்தொகை யில் 19.1 சதவீதம் பேருக்கு இந்நோய் ஏற்பட்டு இருக்கும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது. இந்த நோய் பெரும்பா லும் வயதானவர்களி டையே பெண்கள், கல்வி யறிவு இல்லாதவர்கள், கிராமத்தில் வசிப்பவர் கள் ஆகியோருக்குத்தான் ஏற்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. 

'டெமன்ஷியா' என் பது மூளை சம்பந்தப் பட்ட வியாதி ஆகும். இந்த நோய் வந்தவர்க ளுக்கு நினைவுத்திறன், சிந்திக்கும் திறன், கேள் விக்கு பதில் அளிக்கும் திறன், முடிவு எடுக்கும் திறன் ஆகியவை குறைந்து விடும். மொத்தத்தில், அன் றாட பணிகளை செய்வ தற்கான திறன் கடுமை யாக பாதிக்கப்படும் என் பது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment