உத்தரப் பிரதேச காவல்துறையை மிரட்டிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

உத்தரப் பிரதேச காவல்துறையை மிரட்டிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்

லக்னோ, மார்ச் 11- இது யோகி அரசு, ஆகவே நாங்கள் சொல்லும் வேலையை மட்டும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரப்பிரதேச காவல் துறையை பா.ஜ.க. நாடளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் பல்யாண் மிரட்டியுள்ளார்

உத்தரப் பிரதேசம் முசாபர்நகரின் புத்தனாவில் கட்சி தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட சஞ்சீவ் பல்யாண்  பேசுகையில், இது யோகி அரசு, உங்கள் வேலையை செய்ய கற்றுக் கொள்ளுங்கள் என்று முசாபர்நகர் காவல்துறை அதிகாரிகளை எச்சரித்தார். எங்களது கட்சித் தொண்டர்கள் சில கோரிக்கைகளை வைத்து அமைதியான வழியில் போராட்டம் நடத்துவார்கள், அது அவர்களின் உரிமை, அதே போல் சமூக விரோதிகளின் கொட்டத்தை அடக்கவும் எங்களுக் குத் தெரியும். ஆகையால் காவல்துறையினர் எங் களின் சொல்படி நடக்கவேண்டும் இல்லையென்றால் எங்கள் தொண்டர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று காவல்துறையினரை மிரட்டும் விதமாக பேசி யுள்ளார்.  

அதிகாரிகளை மிரட்டுவதும் காவல்துறையினரை மிரட்டுவதும் நாடு முழுவதும் உள்ள பாஜக தலைவர்களின் அன்றாட நடவடிக்கையாகவே அவர்கள் வைத்துள்ளனர்.

சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு 

ஜூன் 3இல் முதல்நிலை தேர்வு 

சென்னை, மார்ச் 11- உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் 8.3.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பு: சிவில் நீதிபதி பதவியில் (புதுச்சேரி நீதித் துறை பணி) 19 காலியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப் பட உள்ளன. இப்பதவிக்கு வழக்குரைஞர்கள் விண் ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 25 முதல் 35 வரை. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 25 முதல் 40 வரை. இந்த ஆண்டு சட்டப் படிப்பை முடித்தவர்களாக இருந்தால் வயது 22 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.2 ஆயிரம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

அதன்படி முதல்நிலைத் தேர்வு ஜுன் 3ஆம் தேதியும் அதைத்தொடர்ந்து முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 5 மற்றும் 6ஆம் தேதியும், இறுதியாக நேர்காணல் அக்டோபர் 9ஆம் தேதியும் நடை பெறும். உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு உடைய வர்கள் https://www.mhc.tn.gov.in மூலம் ஏப்.1 விம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment