மார்ச் 1 - மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 26, 2023

மார்ச் 1 - மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருநாள்


நிலத்தின் ஒளிச்சுடர்! நெஞ்சுக்கு நீதியின் தொடர்!! நீதியரங்கம்

தமிழர் தலைவர் உரையாற்றினார்

சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாள் தொடர் நிகழ்வாக மார்ச் 1, மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் - நிலத்தின் ஒளிச்சுடர்! நெஞ்சுக்கு நீதியின் தொடர்!!" என்னும் தலைப்பில் "நீதியரங்கம் 25.3.2023 அன்று மாலை 7 மணியளவில் பெரவள் ளூர் ஜெயின் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கொளத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் அய்.சி.எப். வ. முரளிதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தி.மு.க. சட்டத்துறை துணைச் செயலார் வழக்குரைஞர் கே. சந்துரு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தி.மு.க. சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து உரையாற்றினர். மேனாள் நீதிபதிகள் ஏ.கே. இராஜன், அக்பர் அலி, கே.சந்துரு ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மனிதநேய நோக்கின் அடிப்படையிலான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் - தமிழ்நாடு அரசின் சாதனைகள் பற்றியும் விளக்கமாகப் பேசினர்.

தமிழர் தலைவர் உரை

நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவர் தமது உரையில்

அரங்க நிகழ்ச்சிகளில் மட்டுமே பெரிதும் கலந்து கொள்ளும் நீதிபதிகள் பொது வெளியில் ஏராளமான பெண்கள் திரண்டு வந்துள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது சிறப்பானது என்று குறிப்பிட்டார்.

மேலும், அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 விழுக்காட்டுக்கு உயர்த்தியும், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளுக்கு பெண்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், சொத்தில் சம உரிமை என பெண்கள் மேம்பாட்டுக்கு வகை செய்தது திராவிட இயக்க ஆட்சிகளின் சாதனைகளில் குறிப்பிடத்தக்கது. 

இளஞ்சிறார்கள் கல்விக்கு வகை செய்யும் காலை உணவுத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படவுள்ள ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டம், பெண்கள் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் -  குடும்பத்தில் அய்ந்து பெண்கள் அவ்வாறு கல்வி கற்றாலும் அய்வருக்கும் அத்தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தவறாமை என பெண்ணுரிமைக் காவலராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதனைகள் படைத்து வருவதை எடுத்துக் கூறினார்.

ஒன்றிய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஆட்சி கொடுத்த வாக்குறு திகளை நிறைவேற்றாது மக்களையும், இளைஞர்களையும் ஏமாற்றுகிறது. இந்தியாவின் முதலமைச்சர்களில் முதல்வராக திகழ்ந்து, 'திராவிட மாடல்' நல்லாட்சியின் காவலர்களாக நாம் என்றும் இருக்க வேண்டும் என்று கூறி தமிழர் தலைவர் உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் தமிழர் தலைவரின் உரையை அமைதியாகவும், ஆர்வத்தோடும் கேட்டனர்.

நிகழ்ச்சியில் தமிழர் தலைவருக்கும், மேனாள் நீதிபதி களுக்கும் பயனாடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ப. ரங்கநாதன், கொளத்தூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் எ. நாகராசன் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், அமைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் வீரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரப்பாண்டி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு, சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ. கோபால், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் துரை. அருண், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன், துணைத் தலைவர் செம்பியம் கி. இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு. அன்புச்செல்வன், துணை அமைப்பாளர் சி. பாசுகர், செம்பியம் செயலாளர் டி.ஜி. அரசு, கொடுங்கையூர் தலைவர் கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, முத்தமிழ் நகர் அமைப்பாளர் வி. இரவிக்குமார், த. பிரிதின், வண்ணை குணசேகரன் மற்றும் கழகத் தோழர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

செம்பியம் பேப்பர் பிரஷ் சாலை மற்றும் நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் வண்ணக் கொடிகள் வரிசையாக கட்டப்பட்டி ருந்தன. விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை குழுமியிருந்த மக்கள் உற்சாக ஒலி முழக்கமிட்டு கரங்கூப்பி அன்புடன் வரவேற்றனர். கொளத்தூர் கிழக்குப் பகுதி தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியின் நிறைவாக வட்ட தி.மு.க. செயலாளர் ஜார்ஜ்குமார் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment