உடுமலைப்பேட்டை, ஜன. 9- தாராபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 7.-1.-2023 காலை 10 மணி அளவில் உடுமலை தளி ரோடு தேசாஜ் மகாலில் திராவிடர் கழக பொது செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது மாநில வழக்குரைஞர் அணி துணை செயலா ளர் ஜெ. தம்பி பிரபாகரன் வரவேற் புரையாற்றினார்
அமைப்புச் செயலாளர் ஈரோடு
த. சண்முகம், மாவட்டத் தலைவர்
க. கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஆ.முனீஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் நா.மாயவன், பொதுக்குழு உறுப்பினர் கி.மயில்சாமி, பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நா.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, உடுமலை வே.கலையரசன், உடுமலை அ.ப.நட ராஜன், மடத்துக்குளம் ஒன்றிய செய லாளர் ம.தங்கவேல், தாராபுரம் நகரத் தலைவர் இரா. சின்னப்ப தாஸ், தாரா புரம் நகர செயலாளர் இரா. வீராச்சாமி, பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் பு.முருகேசு, தூங்காவி தி.வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உடுமலை நகரத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் காஞ்சிமலையான் அவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள் கிறது.
தீர்மானம் எண் 1: 6.-2.-2023 உடுமலை யில் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூக நீதி பாதுகாப்பு-திராவிட மாடல் விளக்க பரப்பரை தொடர் பயண பொதுக்கூட்டத்தை மிகச் சிறப்பாக நடத்துவது கூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவரை சிறப்பாக வரவேற் பதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 2: தொடர் பயண பொதுக்கூட்டம் குறித்து தாராபுரம் கழக மாவட்டம் முழுவதும் சுவர் எழுத்து பணிகள் மாவட்ட துணை செயலாளர் மாயவன் தலைமையில் செய்து முடிப்பதென முடிவு செய்யப் படுகிறது.
தீர்மானம் எண் 3: தொடர் பயண பொது கூட்டத்திற்கு தோழமைக் கட்சி பொறுப்பாளர்களை அழைத்து பங்கு பெற செய்வதென தீர்மானிக்கப்படு கிறது.
தீர்மானம் எண் 4: உடுமலை நகர- ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம். நகரத் தலைவர் அ.ப.நடராஜன், நகரச் செயலாளர் வே. கலையரசன், ஒன்றிய தலைவர் ச.பெரியார் பித்தன், ஒன்றிய செயலாளர் தூங்காவி தி.வெங்கடா சலம்.
திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ். ஆறுச்சாமி ரூ1000 நன்கொடை வழங்கி தொடங்கிவைத்தார்.

No comments:
Post a Comment