பட்டுக்கோட்டை, ஜன. 9- பட்டுக் கோட்டை கழக மாவட்டத்தில் பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயர் ஆய்வு மய்யம் தமிழ்நாடு முழுவதும் நடத்திய பெரியார்1000 தேர்வில் பட்டுக் கோட்டை மாவட்டத்தில் 6374 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு இத்தேர்வை எழுதினர். எண்ணிக்கை அடிப் படையில் மாநிலத்திலேயே பட்டுக்கோட்டை கழக மாவட் டம் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் மாநில அளவில் 45 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் 120 பேர். இதில் பட்டுக்கோட்டை மாவட் டத்தில் மட்டும் 37 மாணவர்கள் 45 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று மாநில அளவில் முதலி டம் பிடித்தனர்.
மேலும் பட்டுக்கோட்டை நகர ஒன்றியத்தில் மட்டும் 2650 மாணவர்கள் இத்தேர் வினை எழுதி ஒன்றிய அளவி லும் முதல் இடத்தைப் பிடித் தனர்.
மாவட்ட அளவில் பட்டுக் கோட்டை துவரங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி முதல் (49) மற்றும் இரண்டாவது (48)மூன்றாவது (47)பரிசுகளை அப்பள்ளியின் 10 மாணவி களே பெற்றனர்.
பட்டுக்கோட்டை சஞ்சய் நகர் செயின்ட் ஜோசப் மேல் நிலைப் பள்ளி மாவட்ட அளவில் இரண்டாவது (48) இடத்தை யும், பள்ளி அளவில் முதல் மற்றும் இரண்டாவது மூன்றா வது பரிசுகளை அப்பள்ளியின்14 மாணவ-மாணவியர்கள் பெற்றனர்.
பட்டுக்கோட்டை தாமஸ் மேல்நிலைப்பள்ளி 48 மதிப் பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பெற்றது.மேலும் ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி , 47 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றது.
மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பரி சுத்தொகையாக பள்ளத்தூர் வீர. சங்கரலிங்கம் நினைவாக அவரது குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் ச. வீரமணி எம்.ஏ .பிஎட், ஆசிரியர் ச. அடைக்கல மணி எம்.ஏ. பிஎட் , உடற் கல்வி இயக்குனர் ச.தமிழ்மணி எம்.பி.எட், எம் .பில், பி.எச்.டி ஆகியோர் ரொக்கமாக ரூபாய் 3000 வழங்கினர்.
மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவ-மாணவியர்களுக்கு அதற்கான பரிசுத்தொகை ரூபாய் 2000 பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ரெ. வீரமணி, மாவட்ட ப.க ஆசிரியர் அணி செயலாளர் என். நடராசன், சேது ஒன்றிய செயலாளர் சண் முகவேல், பட்டுக்கோட்டை சிற்பி சேகர் ஆகியோர் தலா ரூபாய் 2000 வழங்கினர். மூன் றாவது பரிசு பெற்ற மாணவர் களுக்கு மாவட்ட ப.க.தலைவர் அ .இரத்தின சபாபதி பட்டுக் கோட்டை நகர அமைப்பாளர் அ.ரவிக்குமார்,
பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி இரங்க சாமி, கூத்தாடி வயல் ஜெ.நாடி முத்து நினைவாக ஜெ. செந் தில்குமரன் எம் .டெக் ஆகி யோர் தலா ரூபாய் 1000 வழங் கினர்.
மேலும் மாவட்ட அளவில் பரிசுகளை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட தலைவர் பெ .வீரையன் பட்டுக் கோட்டை சிற்பி சேகர் ஆகி யோர் 30 கற்கும் மேற்பட்ட பெரியார் புத்தகங்களை பரி சாக வழங்கினர்.
பள்ளிகளில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட தி.க தலைவர் பெ .வீரையன் , பொதுக்குழு உறுப்பினர் அரு. நல்லதம்பி, மாவட்ட ப.க தலைவர் அ .இரத்ன சபாபதி, ஒன்றிய தலைவர் ரெ .வீரமணி, ஒன்றிய செயலாளர் ஏனாதி இரங்கசாமி, நகர தி.க அமைப் பாளர் அ. இரவிக்குமார் சமூக செயல்பாட்டாளர் க.முகமது யஹ்யா மற்றும் பட்டுக் கோட்டை சிற்பி சேகர் ஆகியோர் அனைத்து பள்ளி களுக்கும் சென்று பரிசு பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி வாழ்த்தி பதக்கங் களையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.
அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ஏராள மான மாணவ மாணவியர்கள் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து கழகப் பொறுப்பாளர்கள் அனைவ ருக்கும் நன்றி கூறினர்.


No comments:
Post a Comment