கிருட்டினகிரியில் நடைபெற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

கிருட்டினகிரியில் நடைபெற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, ஜன. 25- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் (27.12.-2022) செவ்வாய்க் கிழமை காலை 11 மணியளவில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் கிருட்டினகிரி ஜே.கே. கார்டன் தாபா ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் த. மாது அனைவரையும் வரவேற்று பேசினார்.

இக்கூட்டம் மாவட்ட தலைவர் த. அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணை தலைவர் வ. ஆறுமுகம் ,மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா சரவணன், மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் உரையாற்றினார். அதில் கிருட் டினகிரி நகரில் பெரியார் மய்யம் திறப்பு விழாவை எவ்வாறு சீரும் சிறப்புமாக ஒரு பெரிய மாநாடு போல நடத்துவது எனவும், திறப்பு விழாவிற்கு ஒவ்வொரு கழக தோழர்களும் எவ்வாறு சிறப்பாக  தங்களின் பங்களிப்பை செலுத்துவது எனவும் வேலைகளை பிரித்து சிறப்புடன் செய்வது குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி தொடக்க உரையாற்றினார்.

அதன் பின் தோழர்கள் ஒவ்வொருவராக தங்களின் கருத்துகளை எடுத்துக் கூறி பெரியார் மய்யத்திற்கு தங்கள் பங்களிப்பை எவ்வளவு என்பது அறிவித்தனர். அதில் பொதுக்குழு உறுப்பினர் த. சுப்பிரமணியம் ரூ. 10,000 வழங்குவ தாக அறிவித்துள்ளார். (ஏற்கெனவே 10,000 வழங்கியுள்ளார்). பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி 40 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார் (முன்பே 10,000 ரூபாய் வழங்கி உள்ளார்)

பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி  5 ஆயிரம் ரூபாய் மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கி னார். மேலும் 40 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும்  கூறினார். ஏற் கனவே 5,000 வழங்கியுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளரும், விடுதலை வாசகர் வட்ட தலைவருமான வெ.நாராயண மூர்த்தி ரூபாய் 50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார். (ஏற்கனவே 50 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார்.)

பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் முல்லை. மதிவாணன் ரூபாய் 50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார்( ஏற்கனவே 60 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்)

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரூர் ச.இராஜேந்திரன் 50,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே (125 மூட்டை சிமெண்ட் வழங்கி உள்ளார்)

மாவட்டத் தலைவர் த.அறிவரசன் 25 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார் . அவருடைய குடும்பத்தின் சார்பில் ஏற்க னவே 50ஆயிரம் வழங்கி உள் ளார்கள்.

மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம் 30ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.(ஏற்கெனவே 20,000 வழங்கியுள்ளார்.)

மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம் 30,000 வழங்குவதாக அறிவித்துள்ளார். (ஏற்கெனவே 20 ஆயிரம் வழங்கியுள்ளார்)

கிருட்டினகிரி நகர தலைவர் கோ. தங்கராசன் 10,000 வழங்குவதாக அறிவித்துள்ளார். (ஏற்க னவே 10,000 வழங்கி உள்ளார்.)

மேனாள் மாவட்ட இணை செயலாளர் பழனிச்சாமி 5,000 வழங்குவதாக அறிவித்துள்ளார் (ஏற்கெனவே 1,000 லிட்டர் கொள் ளளவு உள்ள தண்ணீர் தொட்டி (வாட்டர் டேங்க்) வழங்கியுள்ளார்).

பொதுக்குழு உறுப்பினர் திராவிட மணி 2,000 வழங்குவதாக அறிவித்துள்ளார்.(ஏற்கனவே 1,000 வழங்கி உள்ளார்).

காவேரிபட்டினம் நகர தலைவர் பு. ராஜேந்திர பாபு 4,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்து உள்ளார் (ஏற்கனவே ஆயிரம் வழங்கியுள்ளார்).

காவேரிப்பட்டினம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம் 7,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார் (ஏற்கெனவே 3,000 வழங்கி உள்ளார்)

மத்தூர் ஒன்றிய செயலாளர் வே. திருமாறன் அய்ந்தாயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்து உள்ளார் (ஏற்கனவே 5 ஆயிரம் வழங்கியுள்ளார்)

காவேரிப்பட்டணம் ஒன்றிய மேனாள் தலைவர் சி. சீனிவாசன் அய்ந்தாயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார்

பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அ.வெங்கடாசலம் 5,000 வழங்குவதாக அறிவித்துள் ளார்.

மத்தூர் முருகம்மாள் சின்ராஜ் அய்ந்தாயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பர்கூர் ஒன்றிய தலைவர் ப. பிரதாப் அய்ந்தாயிரம் வழங்கு வதாக அறிவித்துள்ளார்

மாவட்ட எம் ஆர் ஆர் சி தலைவர் ச. ஜோதிமணி 10,000 வழங்குவதாக அறிவித்துள்ளார் (ஏற்கெனவே 10 ஆயிரம் வழங்கி யுள்ளார்)

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.கோ. ராஜா 5 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார்

மேலும் ஊமை ஜெயராமன் -தகடூர் தமிழ்ச்செல்வி இணையரின் பெயர்த்தி நிரஞ்சனா அம்பேத்கர் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டனார். அதன் மகிழ்வாக பெரியார் மய்யத்திற்கு நன்கொடையாக ஆயிரம் ரூபாயை மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார்.

தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம் ரகுமான் செரிப் விழாவிற்கு மேடை மேடை மற்றும் ஒலி ஒளி அமைப்புகளை ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்.

மேலும் புதிதாக தன்னை இணைத்துக் கொண்ட அன்பர சுவிற்கு மாநில அமைப்பாளர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். .மேலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நல வாரியத்தின் பிரதிநிதியாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகருக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் சால்வை அணிவித்து சிறப்பு செய் தார்.

இறுதியாக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் தலைமை  உரையாற்றினார். அதில் ஒவ்வொரு கழகத் தோழரும்  இணைந்து செயலாற்றி கிருஷ்ணகிரி மாநகருக்கு ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டும் எனவும் மேலும் கிருட்டினகிரி நகரம் முழுவதும் கொடிகள் கட்டியும், வரவேற்பு பதாகைகள் வைத்தும், தமிழர் தலைவர் மற்றும் அமைச் சர் பெருமக்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தும் சிறப்பாக திறப்புவிழாவை நடத்த வேண்டும் என்று கூறி உரையாற்றி நிறைவு செய்தார். இறுதியாக ஆ.கோ. ராஜா நன்றி கூறினார்

கடை வசூல் செய்வதற்காக அய்ந்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

1. த. மாது ஒன்றிய தலைவர்

மா. செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர்

2. கி.முருகேசன் மத்தூர் ஒன்றிய தலைவர்

மணிமொழி மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்

3. செ. பொன்முடி ஊற்றங்கரை ஒன்றிய தலைவர்

சீனி முத்து ராஜேசன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

4. ப.பிரதாப் பர்கூர் ஒன்றிய தலைவர்

மு.சிலம்பரசன் மண்டல இளைஞரணி செயலாளர்

5. கே செல்வம் காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர்

இ. சமரசம் மண்டல மாணவர் கழகச் செயலாளர்

ஒன்றிய தலைவர்கள் தலைமையில் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் குழு அமைக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment