பா.ஜ.க. ஆட்சியா?
பார்ப்பன ஆட்சியா?
* 10 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தவேண்டும்.
- தமிழ்நாடு பிராமணர் சங்கம்
>> பழங்குடியினர் 58 சதவிகிதம் மார்க் வாங்கவேண்டும். பார்ப்பனர் 28 சதவிகிதம் வாங்கினால் போதும், அரசு பணி கிடைக்கும் என்பதாலா? பா.ஜ.க. ஆட்சியா, பார்ப்பன ஆட்சியா என்ற குரல் நாடெங்கும் ஒலிக்கட்டும்!
அர்ச்சகர்களே திருடுகிறார்களே!
* பக்தி இல்லாதவர்களை கோவில் அறங்காவலர் களாக நியமிக்க முடியாது.
- சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
>> கோவில் அர்ச்சகர்களே சாமி சிலைகளைத் திருடுகிறார்களே, நகைகளை அபகரிக்கிறார்களே!
இதுதானோ...?
* நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. - அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி உறுதி.
- பி.ஜே.பி. அண்ணாமலை
>> கெஞ்சினால் மிஞ்சுவது - மிஞ்சினால் கெஞ்சுவது என்பது இதுதான்.
வேண்டாம் - வேண்டாமே!
* இன்னொரு மொழி கற்பதைத் தடுக்கவேண்டாம்.
- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
>> இன்னொரு மொழியையும் திணிக்க
வேண்டாம்!
அதுதானே...!
* நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியவர் பிரதமர் மோடி.
- ஜெ.பி.நட்டா, பி.ஜே.பி. தலைவர்
>> உண்மைதான். இந்தியா முழுமையும் ஒரே கலாச்சாரம் என்றாரே, அதுதானே!
No comments:
Post a Comment