ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 6.1.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா   தெரிவித்தார்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* தமிழ் நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு.

* பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை விலக்கும் மசோதாவிற்கு கேரள மாநில ஆளுநர் ஆர்ப் கான் ஒப்பம் இட மறுப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்கள் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவது தொடர்பான வரைவு விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வியாழக்கிழமை வெளியிட்டது.

தி டெலிகிராப்:

* பீகார் மாநிலத்தின் சம்பரான் மாவட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று சமாதான் யாத்திரையை தொடங்கியுள்ளார். வருகின்ற 29ஆம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும். அதன் பின்னர் பிற மாநில தலைவர்களையும் சந்திக்க முடிவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மோடி அரசின் தவறான கொள்கைகள் தொழில் நிறுவனங்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டன, மக் கள் சொல்வதைக் கேட்டு கொள்கைகளை மாற்றி கொள் ளுங்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல் வேண்டுகோள்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment