தனி ஆளாக மயான குற்றங்களை தடுத்த பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

தனி ஆளாக மயான குற்றங்களை தடுத்த பெண்

வன்முறை மற்றும் அச்சுறுத்தல் களுக்கு மத்தியில், குற்றம் நிறைந்த எரியூட்டும் அறையை மாற்ற தன்னந் தனியே போராடி வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த 44 வயது எஸ்தர் சாந்தி. 

சென்னை ஓட்டேரி சுடுகாட்டில் மேலாளராகப் பணியாற்றும் எஸ்தர் சாந்தி, ஒவ்வொரு நாளும் தனது உயி ருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும், அந்த இடத்தை மாற்றியமைப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளாக போராடி வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஓட்டேரி புதைகுழி மற்றும் சுடுகாட்டை நிர்வகித்து வரு கிறார். இது அவருக்குக் கடினமான பய ணமாகவே இருந்தது. எனினும், துணிச் சலுடனும் திறமையுடனும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டார்.

“எனக்கு நான் எல்லைக் கோட்டைப் போட்டுக் கொண்டதில்லை. எரியூட்டும் கூடத்தை நிர்வகிக்கும் பொறுப்பு என்னைத் தேடி வந்தபோது, ஒரு பெண் என்பதால், இந்தப் பணியைச் செய்ய முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஏற்றுக் கொண் டேன். ஓட்டேரி மிகவும் மோசமான பகுதி. இது குறித்து எங்கள் அலுவலகத் திலேயே பேசிக் கொண்டார்கள். ஓட் டேரி எரியூட்டும் கூடமா? ஆளைவிடு என்று பலரும் தப்பி ஓடினார்கள். ஆணோ, பெண்ணோ யாராக இருந் தாலும் ஓட்டேரி எரியூட்டும் கூடத்தில் பணியாற்றுவது மிகவும் கடினம் என் றனர்.

எனது உயர் அதிகாரியுடன் சென்று ஓட்டேரி சுடுகாட்டை நேரில் சென்று பார்த்தேன். வேலங்காடு எரியூட்டும் கூடம் போல் சுத்தமாகப் பராமரிக்கப்பட வில்லை.

இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத் தியது. சரியாக நிர்வகிக்கப்படாததால், மது, அருந்துவோர் மற்றும் குற்றம் புரிவோரின் கூடாரமாக இருந்தது. இங்கு மேலாளராகப் பணியில் சேர்ந்த முதல் 2 ஆண்டுகள் அமைதியாகத்தான் போனது. இந்தப் பகுதி குற்றம் புரிவோரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஆட்டோ ஓட்டுநர்கள் கூட ஓட்டேரி பகுதிக்குச் சவாரி வர மறுத்தார்கள். இப்படிப்பட்ட மோசமான பகுதியில் வேலை செய்வது ஆபத்தாக இருந்தா லும் கூட, அந்தப் பணியிலிருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது இல்லை. நிலைமையை சரிசெய்ய என்ன செய்யலாம் என்று மட்டும் யோசித்தேன். அப்போது நான் செய்த முதல் காரியம், உள்ளூர் காவல் துறையுடன் இணைந்ததுதான். சுடுகாடு முழுவதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினேன். அதன்பின், தவறான பாதையில் சென்று கொண்டிருந்த சிறு வர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்தேன். எனக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். தவறு செய்யும் சிறுவர்களைப் பார்க்கும்போது என் குழந்தைகளைப் பார்ப்பது போலவே இருந்தது. நான் என்னை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. இந்த இடத்தை விட்டு ஓடக் கூடாது என்பதில் நான் உறு தியாக இருந்தேன். காவல் நிலையத்தில் உள்ள பெண் காவல் ஆய்வாளரின் நட்பு எனக்குக் கிடைத்தது. அவர் எனக்குப் பெரிதும் உதவினார். இன்றைக்குக் கூட பிரச்சினைகள் வரும்போது நான் அவரையே அழைக்கிறேன். 5 நிமிடங் களில் இங்கு வந்துவிடுவார்.

ஒரு தன்னார்வத் தொண்டு நிறு வனத்தில் பணியாற்றியது மற்றும் என் 3 ஆண் குழந்தைகளை வளர்த்த அனுப வத்தால், இந்தச் சிறுவர்களை எப்படிச் சமாளிப்பது என்று எனக்குத் தெரிந்திருந் தது. நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கினேன். அவர்களை வளர்ப்பதற்காக அவர்கள் பெற்றோர் செய்யும் தியாகங்களை நினைவுபடுத்தி னேன். பல முயற்சிகளுக்குப் பிறகு, அவர்களிடம் நான் மாற்றங்களைக் காண ஆரம்பித்தேன். பெண்களால் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள முடியும் என்பதை நான் இங்கு உணர்ந் தேன். இன்றைக்கு நான் ஏராளமான விருதுகளை வென்றுள்ளேன். கரோனா காலத்தில் 300 க்கும் மேற்பட்ட உடல் களை எரியூட்டியிருக்கிறேன். எனக்கு விடுமுறையே கிடையாது. முரடர்களைச் சமாளிக்கும் கலையில் நான் நிபுணத்து வம் பெற்ற பிறகும், பலரும் என்னை அவமானப்படுத்துகின்றனர். இதனால் பல இரவுகள் உறங்காமல் இருந்திருக்கி றேன்.

No comments:

Post a Comment