தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்

களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 7.1.2023 அன்று இரவு 8.00 மணிக்கு திருப்பூர் பெரியார் புத்தக நிலையத்தில் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அமைப்புச் செயலாளர் ஈரோடு த. சண்முகம்,மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி,பகுத்தறிவாளர் கழகம் பல்லடம் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாநகர தலைவர் இல.பாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழகம் நளினம் க.நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் துரை முருகன்,மாவட்ட இளைஞரணி தலைவர் கு.திலீபன்,பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் க.மைனர், ச.சிவகுமாரன், ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர் இறுதியாக மாநகர அமைப்பாளர் ப.குமரவேல் நன்றியுரை கூறினார்.

தீர்மானம் எண் : 1

தந்தை பெரியார் அவர்களின் கொள்ளுப் பேரனும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்  ஈ.வி.கே.ச. இளங்கோவன் அவர்களின் மகனுமான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்களின் மறை விற்கு  இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறது.

தீர்மானம் எண் : 2 

4-2-2023 அன்று  திருப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூக நீதி பாதுகாப்பு- திராவிட மாடல் விளக்க பரப்பரை தொடர் பயண பொதுக் கூட்டம் மிகச் சிறப்பாக நடத்துவது - கூட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவரை சிறப்பான வரவேற்பளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.

பகுத்தறிவாளர் கழகம் நளினம் க.நாகராஜ் ரூ.25,000 வழங்குவதாக  அறிவித்தார்.

பகுத்தறிவாளர் கழகம் பல்லடம் இளங்கோ ரூ.500 நன்கொடை வழங்கினார்.

தேவக்கோட்டை

பிப்ரவரி 26 காரைக்குடி கழக மாவட்டம் தேவக் கோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயண பொதுக் கூட்ட ஏற்பாடு குறித்து காரைக்குடி குறள் அரங்கத்தில் 08-01-2023 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி தலைமையில், சிவகங்கை மண்டல தலைவர் கே எம் சிகாமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட செயலாளர் ம.கு. வைகறை, பொதுக்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பெரும் பயண மண்டல பொறுப்பாளர், மாநில தொழிலா ளர் அணி செயலாளர் மு.சேகர் , கூட்டத்தை எவ்வாறு நடத்துவது, திட்டமிட்டு செயலாற்றுவது, தோழமை கட்சியினரை இணைத்து சிறப்பான வகையில் கூட்டத்தை நடத்து வது குறித்து ஆலோசனை வழங்கினார்.

தீர்மானங்கள்:

சமூக நீதி பாதுகாப்பு- திராவிட மாடல் விளக்க பெரும் பயண பொதுக்கூட்டத்திற்கு பிப்ரவரி 26, 2023 அன்று தேவக் கோட்டைக்கு வருகை தரும் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும், பத்தாண்டுகளுக்குப் பிறகு, தேவகோட்டை பொதுக் கூட்டத்திற்கு தேதி வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்வில் மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிவேல், காரைக்குடி நகர தலைவர் ஜெகதீசன், நகர செயலாளர் தி.க கலைமணி , பேராசிரியர் மு.சு.கண்மணி, மாவட்ட ப. க தலைவர் சு.முழுமதி, ப.க.சுந்தரம், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் கல்லூர் சி.செல்வமணி, தேவக்கோட்டை நகர செயலாளர் வழக்குரைஞர் முத்தரசு பாண்டியன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் குமரன் தாஸ், சொ.சேகர், (த.நா அ.போ க) ஆ.பால்கி, தொமுச செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று தனது கருத்துக்களை பதிவு செய்தனர்.

ஈரோடு

 ஈரோடு கழக மாவட்ட பொறுப்பாளர்கள்  கலந்துரையாடல் கூட்டம் 8.1.2023 அன்று மாலை 5 மணிக்கு ஈரோடு மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு தலைமையில், மண்டல தலைவர் இரா.நற்குணன், மாவட்டச் செயலாளர் மா. மணி மாறன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. 

அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தொடக்க வுரையாற்றினார். பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரை பயணத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றியும், எவ்வாறு கூட்டத்தை மிக சிறப்பாக நடத்துவது என்றும், தமிழர் தலைவர் அவர்களுக்கு ஈரோட்டில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், விளம்பரங்கள், நிதி வசூல், கடைவீதி வசூல் நடத்துவது குறித்து விரிவாக சிறப்புரை நிகழ்த்தினார்.

கலந்து கொண்ட தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

தீர்மானம் - 1: இரங்கல் தீர்மானம்.

தந்தை பெரியாரின் கொள்ளுப் பேரனும், மேனாள் ஒன்றிய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்தின் முன்ணனி தலைவருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா மறைவிற்கு கலந்துரையாடல் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டது. 

தீர்மானம் - 2:

தமிழர் தலைவரின் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரை பயணக் கூட்ட தொடக்க விழாவிற்கு ஈரோட்டிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ச்சிறப்பான வரவேற்பு அளிப்பது மற்றும் ஈரோடு திருநகர் காலனியில் நடைபெறும் தொடக்க விழாக் கூட்டத்தை மிக சிறப்பாக நடத்துவது என முடிவெடுக்கப் பட்டது..

தீர்மானம் - 3:

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்:

ஈரோடு  மாவட்ட, மாநகர, ஒன்றிய 

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

ஈரோடு மாநகரம் மாநகரதலைவர் - கோ.திருநாவுக்கரசு.

மாநகர செயலாளர் - தே.காமராஜ்

மாநகர அமைப்பாளர் - சா.ஜெபராஜ் செல்லத்துரை

துணைத் தலைவர் - பார்த்திபன்

துணைச் செயலாளர் - ஜெ.ஜெயச்சந்திரன்

மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

மாவட்டதுணைத் தலைவர் - வீ.தேவராஜ்.

மாவட்டதுணைச் செயலாளர் - து.நல்லசிவம்.

ஈரோடு ஒன்றி கழக செயலாளர் - நசியனூர் குமார்.

ஆகியோர் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், ஈரோடு மண்டலத் தலைவர் இரா.நற்குணன், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், பேராசிரியர் பா.காளிமுத்து, மருத்துவர் தமிழ்க்கொடி, கோ.திருநாவுக்கரசு, ஈரோடு மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ், மாநகர செயலாளர் வீ.தேவராஜ், சா.ஜெபராஜ் செல்லத்துரை, ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மோகன்ராஜ், பவானி ஒன்றிய தலைவர் அ.அசோக் குமார், குருவை நகர தலைவர் ப.சத்தியமூர்த்தி, ம.அன்பு பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் விஜயமங்கலம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் அன்பு பிரசாத் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

3.2.2023 நடைபெறவுள்ள கூட்டம் சிறப்பாக நடைபெற நன்கொடை அளித்தவர்கள்:

டாக்டர் தமிழ்க்கொடி ரூ.10000/-

மண்டல தலைவர் இரா.நற்குணன் ரூ.5000/-

ப.சத்தியமூர்த்தி ரூ.5000/-

பேராசிரியர் ப.காளிமுத்து ரூ.2000

இராமேஸ்வரம்

இராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் பகுதியில் அமைந் துள்ள வசந்தமகாலில் 8.1.2023 அன்று  நடைபெற்ற கலந்துற வாடல் கூட்டத்திற்கு  மாவட்டத் தலைவர் முருகேசன்  தலைமை ஏற்றனர். 

கே.எம்.சிகாமணி  மண்டலத் தலைவர், மகேந்திரராசன் மண்டல செயலாளர், கோ.வ.அண்ணாரவி மாவட்டச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் மாநில தொழிலா ளரணிச் செயலாளர் மு.சேகர், மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா. செந் தூரபாண்டியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட் டம் இராமேஸ்வரம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவதெனவும், ஒத்தக்கருத்து டைய தோழமை இயக்கங்களையும் அழைத்து இக்கூட்டத்தை சிறப்பாக நடத்து வதென்று தீர்மானிக்கப்பட்டது.

ஆசிரியர் வருகை தரும் 26.2.2023 கூட் டத்திற்கு முன் கூட்டியே நிதி உதவி அறிவித்தவர்கள் ராமநாதபுரம் மாவட் டச் செயலாளர் கோ.வ.அண்ணாரவி ரூ 3000, மண்டலத் தலைவர் சிகாமணி ரூ10000, மேனாள் மாவட்டத் தலைவர்  கார்மேகம் ரூ 5000.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொதுக்குழு உறுப்பினர் கணேசன், இளை ஞரணி செயலாளர் சித்தார் கோட்டை கார்த்திக், புதிதாக இயக்கத்திற்கு வருகை தந்த தோழர் மைகேல். கூட்ட முடிவில் கார்மேகம் நன்றி கூறினார்.

பெரம்பலூர் 

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 7.1.2023 அன்று காலை 11 மணியளவில்  மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில்,நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம், மாவட்ட செயலாளர் விசயேந்திரன் முன்னிலை யில் சரவணன் கடவுள் மறுப்பு கூறிட துவங்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சிறப்பான கருத்துரைகளை வழங்கினர்.கழக வளர்ச்சி,கழக இதழ் வளர்ச்சி, தெருமுனைக் கூட்டம்,ஒன்றிய கழக புதிய நிர்வாகிகளை ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டனர்.

திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை பெரம்பலூரில் பரப்புரை செய்ய வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிறப்பாக வரவேற்று கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மு.கந்தசாமியின் நன்றியுடனும் கூட்டம் நிறைவுபெற்றது.

தென்சென்னை 

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 7.1.2023 அன்று மாலை 4.30 மணி அளவில், மயிலாப்பூர் 'சக்தி திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் இரா .வில்வநாதன் அவர்கள் தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாநில அமைப்பு செயலாளர் வி. பன்னீர்செல்வம் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார்.

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடர் பரப்புரை பயணம் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் மயிலாப்பூர் பரப்புரை பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும்  ஆலோசனைகளையும் கருத்துகளையும் கூறி வழிகாட்டுரை வழங்கினார்.

மாவட்ட துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன் மற்றும் சா. தாமோதரன், மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி அமைப்பாளர் இரா.பிரபா கரன், கோடம்பாக்கம் பகுதி பொறுப்பாளர் ச.மாரியப்பன், சூளைமேடு பகுதி பொறுப்பாளர் ந.இராமச்சந்திரன், மயிலாப்பூர் பகுதி பொறுப்பாளர் பெரியார் யுவராஜ், திருவல்லிக்கேணி பகுதி பொறுப்பாளர் எஸ். அப்துல்லா, நொச்சி நகர் ச.துணைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை கூறினர்.

பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்: 1

சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மயிலாப்பூரில் சிறப்பான வரவேற்பு அளிப்பதன முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்: 2

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றும் தொடர் பரப்புரையை கூட்டத்தை மயிலாப்பூரில் 13.02.2023 அன்று மிகுந்த எழுச்சியோடு நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 3

தொடர் பரப்புரை பயணக் கூட்டத்தை விளக்கி 12.02.2023 அன்று திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை அவர்களை கொண்டு தெருமுனை கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

இளைஞர் அணி தலைவர் ச. மகேந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment