பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

பதிலடிப் பக்கம்

பெண்களைக் கீழ்மைப்படுத்தும் பிஜேபி

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

மின்சாரம்

2017 முதல் 2022 ஆம் ஆண்டுவரை நடந்த பெண்களுக்கு எதிரான நிகழ்வுகளில் சில:

1. உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூன் அருகே உள்ள உகைதி கிராமத்தை சேர்ந்த 50 வயதான அங்கன்வாடி பணியாளர் ஒருவர் அங்குள்ள ஆசிர மத்தை ஒட்டியுள்ள கோயிலுக்கு வழிபட சென்றுள்ளார்.

 ஆனால் சாமி கும்பிட சென்ற அவர், பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியை காணாது கணவனும், அவரின் மகளும் தவித்துப் போயினர். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் புகார் மனுவை பெற்றுக் கொள்ள வில்லை என தெரிகிறது. இதனிடையே அடுத்த நாள் காலை 3 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு அவரின் வீட்டுக்கு வந்துள்ளது. அந்த பெண்ணின் வீட்டு கதவை தட்டிய அவர்கள், கோயிலுக்கு அருகே உள்ள கிணற்றில் விழுந்து விட்டதாகவும் தாங்கள் மீட்டு கொண்டு வந்ததாகவும் கூறி நாடகமாடியுள்ளது. ஆனால் உடலில் ரத்தக் காயங்களுடன் கிடந்த அந்த பெண்ணை பார்த்து பதறிப்போன கணவர், தன் மனைவியை மருத்துவ மனை கொண்டு செல்லுமாறு 3 பேரிடமும் கெஞ்சியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு 3 பேரும் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.

ஆனால் அளவுக்கதிகமான ரத்தப்போக்கு, உடலில் ஏற்பட்ட காயங்களால் அந்த பெண் துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பிறகு உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது தான் அவர் கொடூரமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பலியானது தெரியவந்தது. கோயிலுக்கு வந்த பெண்ணை கோயிலின் பூசாரியான சத்திய நாராயணன் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜஸ்பால், வேத்ராம் ஆகிய 3 பேரும் ஒன்று சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்துள்ளனர். ஒருநாள் முழுக்கவே அந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்த அந்த கும்பல், அவரின் பிறப்புறுப்பை சிதைத்தும், விலா எலும்புகளை உடைத்தும் கொடூரமாக துன்புறுத்தியிருக்கிறது. தன் தாய்க்கு நடந்த கொடூரத்தை வெளியே கொண்டு வந்த அவரின் மகள், நடந்ததை எல்லாம் காவல் நிலையத்தில் புகாராக அளித்திருக்கிறார். ஆனால் அதன் மீதும் நடவடிக்கை இல்லை என தெரிகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பெண்ணின் உடல் 18 மணி நேரம் கழித்து பிறகு உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகே நடந்த அத்தனை கொடூரங்களும்  வெளிவந்துள்ளது. இதையடுத்து கோயிலின் பூசாரி மற்றும் அவரின் கூட்டாளிகள் என 3 பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2. உத்தரப் பிரதேசம், மொராதாபாத் மாவட்டம், போஜ்பூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பக்கத்து கிராமத்தில் நடந்த திருவிழா ஒன்றுக்கு சென்றார்.

அப்போது, அங்கு வந்த இளைஞர்கள் சிலர் அந்தச் சிறுமியை தூக்கிச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின், அந்தச் சிறுமியை நிர்வாணமாகவே வீட்டுக்குச் செல்லும்படி அவர்கள் விரட்டிய நிலையில், செய்வதறியாது ஆடையின்றி நிர்வாணமாக அழுது கொண்டே சிறுமி வீட்டுக்கு ஓடிச் சென்றுள்ளார்.

இந்தக் காட்சியை சிலர், 'வீடியோ' எடுத்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிகிழ்வு குறித்து, சிறுமியின் தாய்மாமன் போஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

3. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுகத்தைச்சேர்ந்த சேர்ந்த  சகோதரிகள் இரண்டுபேரும் ஒரே மரத்தில் ஒரே துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற் பட்டது.  விசாரணையில் அந்த இரண்டு சிறுமிகளும் பாலியல்வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனடிப் படையில்  குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

4. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில், 19 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த சிறுமியை உயர்ஜாதியைச் சேர்ந்த  4 இளைஞர்கள், கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்து, அந்த பெண்ணின் முதுகு எலும்பை உடைத்து, நாக்கைத் துண்டித்து, கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் சிகிச்சை பலன் இன்றி அந்த பெண் 10 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.

5. வாக்குமூலம் கொடுக்க வந்த சிறுமியைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி.

உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் பாலியல் வன்புணர்ச்சிப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஒரு சிறுமி ரகசிய வாக்கு மூலம் கொடுக்கச் சென்ற போது, விசாரணை அதிகாரியே, அந்தச் சிறுமியைக் கெடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் லக்னோவில் விசாரணை அதிகாரியிடம் சிறுமி தன்னை ஒரு சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் தந்துள்ளார். இந்நிலையில் அந்த வழக்கு விசாரணைக்காக தன் சகோதரன், மற்றும் பெண் காவல் துறை அதிகாரியுடன் நீதிமன்றத்துக்கு வந்துள்ளார் அந்தச் சிறுமி.

பின்னர் அந்தச் சிறுமியிடம் ரகசிய வாக்கு மூலம் பெறுவதாகக் கூறி பெண் காவல் துறை அதிகாரியையும், சிறுமியின் சகோதரரையும் சேம்பரை விட்டு வெளியே செல்லும்படி விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

இந்நிலையில் தனியாக இருந்த சிறுமியை நீதிமன் றத்தில் உள்ள தனி அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் சொன்னால் சிறைக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாமல் திணறிய அந்தச் சிறுமி எழுத்து மூலம் புகார் தெரிவித்திருந்தார்.

கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தப் பிரச்சினையை வழக்குரைஞர்கள் சங்கம் தட்டி எழுப்பியது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நீதிபதிக்கு புகார் அளித்தனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதற்காக புகாரின் நகலை மாவட்ட நீதிபதி,  உத்தரப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து உடலை காரில் 12 கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற கொடூரம்.

 டில்லி அமன்விகார் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே புத்தாண்டையொட்டி டில்லி யில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அஞ்சலி சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் தனது இருசக்கர வாக னத்தில் அதிகாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

டில்லியின் சுல்தான்புரி பகுதியில் வந்தபோது எதிரே வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஞ்சலி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந் தார். அத்துடன் அவரது உடல் கார் டயரில் சிக்கியது. இதன் பின்னரும் காரை நிறுத்ததாத ஓட்டுநர், அந்த பெண்ணின் உடலை சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு மேல் இழுத்துச்சென்று விட்டார். சுல்தான்புரியில் இருந்து கஞ்சவாலா பகுதி வரைக்கும் இந்த கொடூரச் செயலை அவர் அரங்கேற்றினார். கஞ்சவாலா என்ற பகுதியில் அந்த பெண்ணின் உடல் கிடந்தது.  இளம்பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காரில் இருந்த 5 பேரை கைது செய்தனர். 

 இளம்பெண்ணின் உடல் 12 கி.மீ. தூரத்துக்கு மேல் இழுத்துச்செல்லப்படும் காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரில் இருந்தவர்களின் மிருகத்தன மான இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அஞ்சலியில் சடலம் நிர்வாண கோலத்தில் இருந்ததால் அவர் பாலியல்வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. இந்த கோர நிகழ்வு டில்லியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விசாரணையில் கொலையான பெண்ணின் இரு சக்கரவாகனத்தில் வேறொரு பெண்ணும் இருந்ததை சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை அடுத்து மற்றொரு பெண் எங்கே என்று காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.  இந்த நிகழ்வைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் மிட்டல், தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன் மற்றும் மிதுன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர். 

7. 2012 ஆம் ஆண்டு இதே போல் இளம்பெண் ஒருவரை கடத்திச்சென்று பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசப்பட்ட கொடூர நிகழ்வு நடந்தது, அதனை அடுத்து நிர்பயா(பயமில்லாத) என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கை தடுப்புச்சட்டம் நிறைவேறியது. ஆனால் மீண்டும் மீண்டும் இத்தகைய கோர நிகழ்வுகள் வட இந்தியாவில் தொடர்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

- - - - -

பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்ததால் குடும்பத்தில் அமைதி போய்விட்டது என்று கூறிய பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தக்க பதிலடி கொடுத்தார்.

 தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஈரோட்டில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் மொழி இன அரசியல்  கருத்துகள் குறித்து வாத நிகழ்ச்சி நடைபெற்றது, 

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நீதிக்கட்சியில் தொடங்கி திராவிடர் இயக்கவரலாற்று வெற்றி மற்றும் உரிமை மீட்பு குறித்து கருத்துகளைப் பேசிக்கொண்டு இருந் தார். அப்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் மருத்து வர் சரஸ்வதி பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்த தால் குடும்பத்தில் அமைதி போய்விட்டது.." என்று பெரும் அதிர்ச்சிகரமான கருத்தை முன்வைத்தார். 

ஒரு பெண்ணாக இருந்தாலும் பாஜகவில் இருந் தால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்ப தற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருந்தது அவரது பேச்சு.

இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரே வரியில் பதில் கூறினார். பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்த தால் குடும்பத்தில் அமைதி போய்விட்டது, தாழ்த் தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக் கொடுத்ததால் வேலை வாய்ப்பு போய்விட்டது என்று கூறுவார்கள். இதுதான் சனாதனம் அந்தச்சனாதனத்தின் செயலுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் தான், இதோ சகோதரி சரஸ்வதி வாயாலேயே பெண்களுக்கு, சொத்தில் உரிமை கொடுப்பதால் குடும்ப அமைதி போய்விட்டது என்று பேச வைத்துவிட்டார்கள்  என்று பதில் கூறினார்.

பெண்களுக்குப் படிக்கும் உரிமையும் கூடத் தான் கிடையாது. இதனை ஏற்றுக் கொண்டால் பிஜேபி அம்மையார் டாக்டர் சரஸ்வதி ஆகியிருக்க முடியுமா?

ஹிந்துத்துவாவாதிகளின் கொள்கைப்படி கல்விக் குக் கடவுள் சரஸ்வதி - ஆனால் சரஸ்வதி என்ற பெயருடைய பெண்கள் கூடக் கைநாட்டுத் தற்குறி களாகத் தானே இருந்தனர்.

இன்றைக்கு டாக்டர் சரஸ்வதிகளைப் பார்க்க முடிகிறது. சட்டப்பேரவை உறுப்பினராகப் பார்க்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியார் என்பதை மறுக்க முடியுமா? பச்சைத் தமிழர் காமராசரைத்தான் மறக்க முடியுமா?

No comments:

Post a Comment