காணாமல் போன வாக்குப்பெட்டி: தலைமை தேர்தல் அதிகாரிக்கு தாக்கீது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

காணாமல் போன வாக்குப்பெட்டி: தலைமை தேர்தல் அதிகாரிக்கு தாக்கீது!

கொச்சி, ஜன. 20 கேரளாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் நஜீப், பெரிந்தல் மன்னா தொகு தியில் 38 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளர் முஸ்தபா கேரள உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.

கேரளாவின் பெரிந் தல் மன்னா நகரில் உள்ள கருவூலத் தில் 3 வாக்குப் பெட்டிகளில் 348 வாக்குகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த வாக்குப் பெட்டிகளை உயர் நீதி மன்றத் தில் ஒப்படைப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் 15.1.2023 அன்று கருவூலத்துக்கு சென்றனர். அங்கு 2 வாக்குப் பெட்டிகள் மட்டுமே இருந்தன. ஒரு பெட்டியை காணவில்லை. காணாமல் போன அந்த பெட்டியை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக தேடினர். ஒரு நாள் தேட லில் 22 கி.மீ தொலைவில் உள்ள கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் அலுவலகத்தில் காணாமல் போன வாக்குப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 3 வாக்குப் பெட்டிகளும் உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. வாக்குப் பெட்டி காணாமல் போய், கண்டுபிடிக்கப்பட்டது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment