ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 20.1.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* கே.சந்திரசேகர ராவ் துவக்கியுள்ள பாரத் ராட்டிர சமிதி கட்சி கம்மத்தில் நடத்திய பேரணி போல ஆந்திரா, ஒடிசா, சட்டீஸ்கர், கருநாடகா, மகாராட்டிரா, உ.பி., டில்லி என நாட்டின் ஏழு இடங்களில் அடுத்த அய்ந்து மாதங்களுக்குள் நடத்துவோம் என அறிவிப்பு.

* சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஒன்றிய அரசின் கலாச்சார துறை ஆலோசனை நடத்தி வருவதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* கொலிஜியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கு ரைஞர் ஜான் சத்யனை நியமிக்க மீண்டும் பரிந்துரைத் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு பெயர் குறித்து தேவையற்ற சர்ச்சையை உருவாக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் விளக்க அறிக்கை அந்த பதவிக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கியுள்ளது என தலையங்க செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தி டெலிகிராப்:

* 2002இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் நரேந்திர மோடியின் மீது ஒரு கறை என்று பிரித்தானிய மேனாள் வெளியுறவுச் செயலர் ஜாக் ஸ்ட்ரா தெரிவித்துள்ளார். 'வன்முறையின் போது குறைந்தது 2,000 பேர் கொல்லப் பட்டனர், பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள்' என பிபிசியின் ஆவணப் படம் கூறியது.

* தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கான முன்மொழியப் பட்ட திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.  இது எந்த அறிக்கை போலியானது என்பதைத் தீர்மானிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. அரசு எப்படி நீதிபதியாகவும், நடுவராகவும், மரணதண்டனை நிறை வேற்றுபவராகவும் இருக்க முடியும்?’ என கேள்வியும் எழுப்பியது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment