அதானியிடம் கொடுத்தால் அப்படித்தான்! இந்திய வரைபடத்திலேயே மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

அதானியிடம் கொடுத்தால் அப்படித்தான்! இந்திய வரைபடத்திலேயே மாற்றம்

புதுடில்லி, ஜன. 8- விமான நிலையத்தில் பயணிகள் அல்லாதவர்கள் நுழைவ தற்காக அனுமதிச்சீட்டு கள் (பாஸ்) வழங்கப்படு கின்றன.. அதில் இந்தியா வின் நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் தொடர்பான விவரங் களும் இருக்கும் 

அந்தவகையில் அதானி குழுமம் மூலம் இயக்கப்படும் இந்திய விமான  நிலையங்களில் வழங்கப்பட்ட மேற்படி அனுமதி அட்டைகளில் உள்ள இந்திய வரைபடம் தவறாக அச்சிடப்பட்டு இருந்தது.

காஷ்மீர் மற்றும் வட கிழக்கு பிராந்தியம், ராஜஸ் தான், குஜராத் போன்ற பகுதிகள் தவறாக அச் சிடப்பட்டிருந்தன. இது பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. 

இதைத்தொடர்ந்து மேற்படி அனுமதி அட் டைகள் அனைத்தையும் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப் புப் பிரிவு திரும்பப் பெற் றுக்கொண்டது. இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு மேற்படி அனுமதி அட்டைகளை திரும்பப்பெறவும், அச் சிடுதலை நிறுத்தவும் செய்யுமாறு விமான நிலைய ஆணைய தலைவ ருக்கு இந்த பிரிவு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விசா ரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிவில் விமானப் போக்கு வரத்து பாதுகாப்புப் பிரிவு அறிவுறுத்தி உள்ளது

கொச்சி விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கு ரூ.50 வாங்கிகொண்டு இருந்த னர். கேரள அரசின் கோரிக்கையையும் ஏற்கா மல் அதை அதானி நிறுவ னத்திற்கு பிரதமர் மோடி கொடுத்தார். விளைவு கொண்டு போய் நிறுத்தி னாலே ரூ. 130 கட்டணம் ஒருமணி நேரத்திற்கு  மேல் 20 கூடுதல் கட்ட ணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது விமானம் வர தாமதமா னால் காத்திருக்கும் நபர் கிட்டத்தட்ட ஆயிரம் முதல் ரூ.3000 வரை கார் நிறுத்த வாடகைக்கட்ட ணமாக தேவையில்லா மல் தர வேண்டி உள்ளது. 

இப்படி அதானிக்குக் கொடுத்ததால் ஏற்க பட்ட நிர்வாக சீர்கேடு இன்று இந்திய வரை படத்தையே மாற்றி கொடுக் கும் வரை சென்றுள்ளது.

No comments:

Post a Comment