பெண்களே தயாரிக்கும் மின்சார ஆட்டோ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

பெண்களே தயாரிக்கும் மின்சார ஆட்டோ

புனே, ஜன. 8- முற்றிலும் பெண் ஊழியர்களால் தயாரிக்கப்படும் 3 மின் சார மாடல் ஆட்டோக் களை பியோஜியோ நிறு வனம் வெளியிட்டுள்ளது.

பெண்கள் பல்வேறு துறைகளில் கால்பதித்து சாதித்து வருகிறார்கள். அடுப்பறையில் தொடங்கி விண்வெளி வரை அவர் களினை சாதனைகள் நீண்டு வருகின்றன.

ஆட்டோமொபைல் துறையிலும் பெண்கள் கால்பதித்து புதுமை களை படைத்து வருகி றார்கள். இந்தநிலையில், ஆட்டோ தயாரிப்பில் முன்னணி நிறுவனமான, பியோஜியோ மின்சாரத் தில் இயங்கும் ஆட்டோக் களை அறிமுகம் செய்ய உள்ளது. அபே இ-சிட்டி எப்எக்ஸ் மேக்ஸ், இ-எக்ஸ்ட்ரா பியு மேக்ஸ், இ-எக்ஸ்ட்ரா டபிள்யூபி மேக்ஸ் ஆகிய ஆட் டோக்கள் விற்பனைக்கு வர உள்ளன. 

இவற்றின் விலை மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. மகாராட்டிரா மாநிலம் பாராமதியில் உள்ள தொழிற் சாலையில், முழுவதும் பெண் ஊழியர்களால் இந்த ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள், இணைந்து மின்சார ஆட் டோக்களை வெற்றிகர மாக தயாரித்து இருக் கிறார்கள் இ-சிட்டி எப் எக்ஸ் மேக்ஸ் 5.44 கிலோ வாட் மோட்டாரை கொண் டது. இ-எக்ஸ்ட்ரா எப் எக்ஸ் மேக்ஸ் 9.55 கிலோ வாட் மோட்டாரை கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் மாடல் களுக்கு ஏற்ப 115 கி.மீ முதல் 145 கிமீ தூரம் வரை மைலேஜ் வழங்கும். தற்போது பேட்டரி நிலை யாக பொருத்தப்பட்டுள் ளது. விரைவில் பேட் டரியை மாற்றிக் கொள் ளும் வசதி அறிமுகம் செய்யப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள் ளது. மின்சார ஆட்டோக் கள் பயன்பாட்டிற்கு வந் தால், மக்கள் பயணத்திற் காக செய்யும் செலவும் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment