நாட்டின் முக்கியமான பிரச்சினையே லவ் ஜிகாத்-தானாம்! கூறுகிறார் கருநாடக பாஜக தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

நாட்டின் முக்கியமான பிரச்சினையே லவ் ஜிகாத்-தானாம்! கூறுகிறார் கருநாடக பாஜக தலைவர்

பெங்களூரு, ஜன. 8- சாலை, சாக்கடை வசதி போன்ற ‘சிறிய பிரச்சினை’களை விட்டுவிட்டு, ‘லவ் ஜிகாத்’ பிரச்சினைக்கே மக்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கருநாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் பேசியுள்ளார். 

கருநாடகத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதி களுக்கான சட்டப்பே ரவை தேர்தல் ஏப்ரல் மாத இறுதியிலோ அல் லது மே மாத தொடக் கத்திலோ நடைபெற உள் ளது. இதனால் அரசியல் கட்சிகள், முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி நடத்தி வருகின் றனர். 

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த டிசம்பர் 31  அன்று, பெங்களூருவில் பேசும் போது, “2023 சட்டமன் றத் தேர்தல் கருநாடக மக்களுக்கும், அயோத்தி, பத்ரிநாத் போன்ற ஹிந்து வழிபாட்டுத் தலங்களை உருவ £க்கியவர்களுக்கும், திப்பு சுல்தானை மகி மைப் படுத்துபவர்களுக் கும் இடையேயான போட்டியாகும்” என்று மதவெறி நெருப்பைப் பற்ற வைத்தார். 

இதனிடையே, வரு கின்ற தேர்தலில் “சாலை, சாக்கடை போன்ற சிறிய பிரச்சினைகளை விட்டு விட்டு, “லவ் ஜிகாத்” பிரச் சினைக்கே கருநாடக மக் கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கருநாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் கூறியுள் ளார். 

“பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை (பி எப்அய்) தடை செய்த ஒன்றிய அரசின் நடவடிக் கையை வரவேற்கிறோம். இது பல ஹிந்து ஆர் வலர்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவியுள்ளது. இந்த சட்ட விரோத குழு பல கொலைகளை செய்ய  சதி செய்தும் உள்ளது. எனவே, சாலைகள், சாக் கடைகள், வடிகால் மற் றும் பிற சிறிய பிரச்சி னைகளைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் அவர்களி டம் சொன் னேன். எனவே, உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை தொடர்பான பிரச்சினை யான ‘லவ் ஜிகாத்’  நிறுத் தப்பட வேண்டும் என் றால், நமக்கு பாஜக (அரசாங்கம் அமைக்க) வேண்டும்” என்று கூறி யுள்ளார். 

இந்நிலையில், கரு நாடகா பாஜக மாநிலத் தலைவரான நளின் குமார் கட்டீலின் பேச் சுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. “பாஜக தனது தோல்விகளையும், ஊழலையும் மறைக்கவே இந்த வகுப்புவாத கல வரத்தை பயன்படுத்துகி றது” என்றும் குறிப்பிட் டுள்ளது.  

மேலும், “மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவை சிறிய பிரச்சினைகள்! வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டாம்  என்று பாஜக தனது கட்சியி னரைக்  கேட்டுக்கொண் டது வெட்கக் கேடானது. அதை அக்கட்சி கொஞ்சம் கூட செய்யவில்லை” என்று பதிவிட்டுள்ளது.

No comments:

Post a Comment