மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள் தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள் தயாரிப்பு

சென்னை, ஜன. 8- வேளாண் துறை மேம்பாட்டிற்கான விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது இப்போது மிக அதிக அளவில் நடைபெறுகி றது.

இதனால் விவசாயிக ளின் எதிர்பார்ப்புகளை மிகுந்த மகிழ்ச்சியோடு பூர்த்தி செய்வதற்கு மேம் பட்ட தொழில்நுட்பத்தி லான வேளாண் வாக னங்களை சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கி வரு கிறது. விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப டிராக்டர்களை தயா ரித்து அளிப்பதனால் டிசம் பர் 2022இல் நிறுவனத் தின் டிராக்டர் விற்பனை 10,571 ஆக உயர்ந்து, 41.7 சதவீத வளர்ச்சியை உள் நாட்டில் எட்டியதோடு தொழில் துறையின் உத் தேச வளர்ச்சியை (26%) விட, அதீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒட்டு மொத்தமாக நிறுவனம் 1,18,449 டிராக்டர்களை முதல் காலாண்டு முதல் மூன்றாம் காலாண்டு வரை நடப்பு நிதியாண் டில் விற்பனை செய்துள் ளது என இன்டர்நேஷ னல் டிராக்டர்ஸ் லிமி டெட் நிறுவனத்தின் நிர் வாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்து உள்ளார்.


No comments:

Post a Comment