திருச்சி செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

திருச்சி செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

      தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு

      திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை விளக்கி பிப்ரவரி 3 முதல் தொடர் பிரச்சாரம்!

       ஆளுநரை குற்றம்சாட்டி நீக்க நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர எம்.பி.,க்கள் முன்வரவேண்டும்!

திருச்சி, ஜன.24 தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை விளக்கி பிப்ரவரி 3 முதல் தொடர் பிரச்சாரம்; ஆளுநரை குற்றம்சாட்டி நீக்க நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர எம்.பி.,க்கள் முன்வரவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

22.1.2023 அன்று திருச்சிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

இன்றைக்குத் திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டம்- திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற அக்கலந்துரையாடலில் 9தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

அந்த 9 தீர்மானங்களுடைய நகல்கள் உங்களுக்கு வழங்கப்பட்டாலும், சமூகநீதிப் பயணம் என்ற ஒரு பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். திராவிடர் கழகம் எப்பொழுதுமே பிரச்சாரம், போராட்டம் என்ற வடிவிலே இருக்கக்கூடிய, மக்களை ஆயத்தப்படுத்தக் கூடியது. பல்வேறு நலத் திட்டங்கள் 'திராவிட மாடல்' ஆட்சியில் செய்யக்கூடியவற்றை மக்கள் மத்தியில் விரிவாக விளக்குவதற்கும், அதேநேரத்தில், இன்றைக் குத் தமிழ்நாட்டை காவி மண்ணாக்கலாம் என்ற முயற்சியை முறியடிப்பதற்காகவும் ஒரு சிறந்த பிரச்சாரத் திட்டத்தைத் திராவிடர் கழகம், குறிப்பாக என்னுடைய தலைமையில் மேற்கொள்ளவிருக்கிறது.

அந்த வகையில், அண்ணா அவர்களின் நினைவு நாளான பிப்ரவரி 3 ஆம் தேதியிலிருந்து ஈரோடு மாவட்டத்திலிருந்து தொடங்கவிருக்கின்றோம்.

குறிப்பாக தந்தை பெரியார் அவர்கள் அறிவுறுத்திய கொள்கைகளைப் பரப்புரை செய்ய கொங்கு மண்ட லத்திலிருந்து பிரச்சாரப் பணி தொடங்க விருக்கிறது.

அந்தப் பயணம் மார்ச் மாதம்வரையில் நடை பெற்று, கடலூரில் நிறைவேறவிருக்கக்கூடிய அந்தப் பயணத்தில், எப்படியெல்லாம் சமூகநீதி வஞ்சிக்கப் படுகிறது, தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படு கின்றன என்பதை மக்களுக்கு விளக்கவும், அவர்களை ஆயத்தப்படுத்தவும், தொண்டறத்தில் நம்முடைய இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் அந்தப் பிரச்சார பயணத்தை நடத்தவிருக்கின்றோம்.

தேவை தனியார்த் துறையிலும் 

இட ஒதுக்கீடு!

அதுமட்டுமல்ல, நம்முடைய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் நித்தமும் பறிபோகின்றன. ஒரு பக்கத்தில் பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் மோடி ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில், தனியார் மயமாக, தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, அம்பானி, அதானி, டாடா போன்ற பெரு முதலாளிகளுக்கெல்லாம், பெரிய திமிங்கலங்களாக இருக்கக்கூடிய கார்ப்பரேட் தனவான்ளாக இருக்க க்கூடிய முதலாளிகளுக்கு படிப்படியாக விற்கப்பட்டு வருகின்றன அல்லது குத்தகைக்கு விடப்படுகின்றன.

அப்படிப்பட்ட சூழ்நிலையால், வேலை வாய்ப்பு களும், சமூக ரீதியாக, உரிமை ரீதியாக வேலை வாய்ப்புகளும் பறிக்கப்படுகின்றன. ஏனென்றால், தனியார் துறையில், இட ஒதுக்கீடு என்பது இல்லை.

ஆகவே, இந்தப் போராட்டத்திற்கு மக்களைத் தயாரிப்பதற்காக, சமூகநீதியினுடைய மற்றொரு மிக முக்கியமான பகுதியில், பொதுத் துறை நிறுவனங் களைத் தனியார்த் துறைகளாக மாற்றுவதைத் தடுத்து நிறுத்துவது என்கிற கோரிக்கை ஒரு பக்கமும்,

இன்னொரு பக்கத்தில், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை; அங்கேயும் சமூகநீதி பாயவேண்டும் என்ற பிரச்சாரத்தையும் எடுத்துச் சொல்லவிருக்கின்றோம்.

ஜாதி வெறி இருக்கக்கூடிய மாவட்டங்களில், குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டங்களில் நடந்தவை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். தயவு தாட் சண்யம் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

ஜாதிப் பாம்பு மீண்டும் தன்னுடைய விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும்.

அதேபோன்று, பாலின குற்றங்களைச் செய் பவர்களை மன்னிக்கவோ அல்லது அவர்களைத் தண்டிப்பதில் தயவு தாட்சண்யம் காட்டவோ கூடாது என்பதையும் வலியுறுத்தியும்,

நாட்டின் நலன், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள், இளைஞர்களுடைய வேலை வாய்ப்புகள் இவற் றையெல்லாம் முன்னிறுத்தி அந்தச் சுற்றுப்பயணப் பிரச்சாரத்தை நடத்தவிருக்கின்றோம்.

நெய்வேலியில் நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்குக்கூட இடம் கிடையாது. அந்த நிறு வனத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பொறியாளர்களில், ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை.

பொதுத் துறையில், பல இடங்களில் விரிவாக்கத் தினுடைய நோக்கமே, இந்தியாவில் பல மாநிலங்களில் அவற்றை அமைப்பதினுடைய நோக்கமே என்ன வென்று சொன்னால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காகத்தான்.

'திராவிட மாடல்' ஆட்சியில்...

நம்முடைய இளைஞர்களுக்கு முன்பைவிட, திராவிட மாடல் ஆட்சியில், அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தடுப்பதற்காக, சமூகநீதிக்கு எதிராகவும், அறிவியலுக்கு எதிராகவும் அவர்கள் புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே, ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

எனவே, அதில் இருக்கின்ற பலகீனங்களால் எப்படியெல்லாம் நம்முடைய மாநிலத்தினுடைய உரிமைகளைப் பறிக்கக் கூடியதாக இருக்கின்றன என்பதையெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லு கின்ற இந்தத் திட்டங்கள் எல்லாம், இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களிடமும் தெளிவாக்கக் கூடிய பயணமாக அந்தப் பயணம் அமையவிருக்கிறது. அதுகுறித்து இன்று நடைபெற்ற இளைஞரணி கலந் துரையாடலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

அந்தத் தீர்மானங்களை செயல்படுத்துவதற்கு இளைஞர்கள் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், நம்முடைய இளைஞர்கள் தற்பொழுது, ''பெரியார் உடற்கொடை'' படிவம் என்று - முதல் முதலில் தொடங்கியது திராவிடர் கழகம்தான். அதற்காக ஒரு செயலியை இன்றைக்குத் தொடங்கி வைத்திருக்கின்றோம்.

அந்த செயலியைப் பயன்படுத்தி, உயிர் காக்கும் பணியில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நம்முடைய இளைஞர்கள் வெறும் பதவிக்காகவோ அல்லது வேலை வாய்ப்புக்காகவோ அல்லது வரு வாய்க்காகவோ இருக்கின்ற இளைஞர்கள் அல்ல. அதேநேரத்தில், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவேண்டும்; சமுதாயத்தையும் வளப்படுத்தவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

அதற்காகத்தான் இதுபோன்ற தொண்டறப் பணிகளை நடத்தவிருக்கின்றோம்.

ஆங்காங்கே மாநாடுகளும் நடைபெறவிருக்கின்றன. குறிப்பாக திராவிடர் கழக இளைஞரணியின்  மண்டல மாநாடு முதல் மாநாடு என்பது திருச்சி துறையூரில் நடைபெறும் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாணவர்கள், இளைஞர்களுக்கு வசதியான ஒரு காலகட்டத்தில் அதனை ஏற்பாடு செய்து நடத்த விருக்கின்றோம்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று இதே இடத்தில்தான் கடந்த மாதம் 24 ஆம் தேதி அறிவித்தோம்.

அப்படி நாம் அறிவித்தவுடன், எங்கு பார்த்தாலும் அது பரவியதோடு, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள்.

அதைவிட ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இப்பொழுது எதிர்ப்பதற்கு தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் தயாராக இல்லை. எல்லோருடைய ஆதரவும் இருக் கிறது. ஆனால், சில பேர் சில குறுக்குச்சால்களை விட்டாலும்கூட, அந்த அளவிற்குத் தந்தை பெரியார் இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்பதை விட, திராவிடர் கழகத்திற்கு வெற்றி என்று சொல்வதைவிட, அது மக்களுக்குக் கிடைத்த வெற்றி - தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று நான் தெளிவாகச் சொல்லுகிறேன்.

அந்த வகையில், வேலைவாய்ப்புகளுக்கும் சரி, அறிவார்ந்த வளப்படுத்தக் கூடிய திட்டங்களுக்கும் சரி, இவற்றை எல்லாம் திட்டமிட்டு, எந்தவிதமான பதவி ஆசை, புகழ் ஆசை, பெருமைகள் இவற்றையெல்லாம் தாண்டி, இளைஞர்களுக்குத் தொண்டு மனப்பான்மை, ஒவ்வொருவரையும் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தக் கூடிய பாசறை யாக, திராவிடர் கழகம், இளைஞர்களை, மாணவர்களை, மாணவிகளை மற்ற எல்லோரையும் தயாரிக்கக் கூடியதாக இருக்கிறது என்பதுதான் இதனுடைய நோக்கம். அதற்கான திராவிடர் கழக இளைஞரணியின் மாநில கலந்துரையாடல் இன்றைக்குத் திருச்சியில் நடைபெற்றது.

செய்தியாளர்: ஆளுநரைப் பதவி நீக்க சட்டத்தில் இடம் உண்டா?

தமிழர் தலைவர்: அதிகாரம் மக்கள் மத்தியில் இருக்கிறது.  சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத் திற்கோ, நீதிமன்றத்திற்கோ இல்லை. மக்களிடம் தான் இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை தொடங்கும் பொழுது, ''வீ தி பீப்பிள்'' என்றுதான் தொடங்கி யிருக்கிறார்கள்.

ஆகவே, மக்கள் மத்தியில் நடைபெறும் எங்களு டைய பிரச்சாரத்தில் நிச்சயமாக அது இடம்பெறும்.

முன்பு 'நீட்' தேர்வு மசோதாவை இப்படித்தான் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதை எதிர்த்து சுற்றுப்பயணம் செய்தோம். தபால்காரருக்கு என்ன வேலை என்றால், தபாலை கொண்டு போய்ச் சேர்ப்பதுதான். அப்படி கேட்ட பிறகுதான், அது அசைந்தது. இன்றைக்கு ஒன்றிய அரசு, தங்களுடைய சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்கள். அதற்கான பதிலை தமிழ்நாடு அரசு சொல்லியிருக்கிறது.

எனவே, நீட் தேர்வு பிரச்சினைகள் குறித்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதேபோல, ஆளுநர் தன்னுடைய வரம்பு என்னவென்று தெரியாமல், அண்மையில் நடந்து கொண்டதால், நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது.

சென்னையில் நடைபெற்ற தி.மு.க. சட்டக் கருத்தரங்கில் ஒரு கருத்தை நான் சொன்னேன்.

அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினை நாம் வலியுறுத்தவேண்டும். எப்படி ஜாதி ஒழிப்பிற்கு, அரச மைப்புச் சட்டத் திருத்தத்தை வலியுறுத்துகின்றோமோ, அதுபோல.

குடியரசுத் தலைவர், ஏதாவது தவறு செய்தால், நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டு வருகின்ற வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அதேபோன்று, ஒரு மாநில ஆளுநர் தவறு செய்தால், அதுபோன்ற நிலை இல்லை.

ஆளுநர்கள் போட்டி அரசாங்கம் நடத்து கின்றார்கள், தெலங்கானா, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு வரவேண்டுமானால், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தனித் தீர்மானமாக இதைக் கொண்டு வரவேண்டும்.

ஜனநாயகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சிக்கு இடையூறாக, நியமன நபராக இருக்கக்கூடிய ஓர் ஆளுநர் இருந்தால், ஆட்சிக்குக் குறுக்குச்சால் ஓட்டினால், அவரை வெளியேற்றுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டும்.

சட்டமன்றத்தில் மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களைக் கிடப்பில் போடுவது,  காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டு களாக பட்டமளிப்பு விழா நடைபெறாத காரணத் தினால், இன்றைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கியிருக் கிறார்கள்; இதுபோன்ற ஒரு வரலாறு, தமிழ்நாட்டின் வரலாற்றில், இந்த ஆளுநர் வந்த பிறகுதான் நடைபெறுகிறதே, இதற்குமுன் இதுபோன்று கிடையாது.

ஆகவேதான், இவற்றைச் சுட்டிக்காட்டி சட்ட மன்றத்திலே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரக்கூடிய அளவிற்கு, ஆளுநரை நீக்கவேண்டும் அல்லது மாற்றவேண்டும்; ஆளுநர் பதவியே தேவையில்லை என்ற அளவிற்கு மிக முக்கியமாக ஒரு பிரச்சாரத்தை மக்களிடையே நடத்துவோம்.

செய்தியாளர்: ஈஷா யோகா மய்யத்தில் காணாமல் போன பெண்ணின் வழக்கை என்னிடம் கொடுங்கள், நான் கண்டுபிடித்துத் தருகிறேன் என்கிறாரே அண்ணாமலை?

தமிழர் தலைவர்: ''புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது வந்து விழுங்கள்'' என்று சொல்வதுபோன்று இருக்கிறது. அந்தப் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமே உண்டா? அல்லது ஒன்றிய அரசுக்கும் சேர்ந்ததா? என்று அவர் பதில் சொல்லட்டும்.

இரண்டாவது, ஈஷா மய்யத்திற்கு, அபராதம் போட்ட நிலையில், அங்கே சென்றவர் பிரதமரா? அல்லது மற்றவர்களா?

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடப்பதற்கு யார் காரணம்?

எனவேதான், அதிகாரத்தை இப்படித்தான் பெற வேண்டும் என்று விரும்புகிறாரே தவிர, மக்கள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர் இழந்திருக் கிறார். அதுதான் அதற்கு அடையாளம்.

செய்தியாளர்: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பற்றி...?

தமிழர் தலைவர்: நேற்றே சொல்லியிருக்கிறேன். ஈரோடு இந்தியாவிற்கே வழிகாட்டும்; வழிகாட்டிக் கொண்டிருக்கிறது..

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியா ளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment