ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 3.1.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மோடி அரசின் பணமதிப்பிழப்பு  நடவடிக்கையின் வழிமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிப்பு குறித்து தீர்ப்பளிக்க வில்லை என காங்கிரஸ் கருத்து.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பணமதிப்பிழப்பு செய்தது சட்டவிரோதமானது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி பி.வி.நாகரத்னா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பில் நீதிபதி பி.ஆர்.கவாயின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பணமதிப்பிழப்பு செய்தது தவறு. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு சரியான பாதையை கடைப்பிடிக்கவில்லை. ரிசர்வ் வங்கியும் அதை ஆமோதிக்கும் வகையில் செயல் பட்டு உள்ளது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

* 2024 இல் பாஜக மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டால், இயல்பிலேயே ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தியா என்ற கருத்தை ஒருங்கிணைக்கும். இன்று, பிஜேபி தனது எதிரிகள் மீது அரசியல் உட்பொருளை திணிக்க தயாராக உள்ளது, இந்த பயிற்சி முடிந்ததும், கற்பனையான அரச மைப்பு ஜனநாயகத்தில் இருந்து இந்தியாவை பெரும் பான்மைவாத ஆட்சியாக மாற்றுவது முழுமையடையும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் சுகாஸ் பல்சிகார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2024 தேர்தலுக்கு முன்னதாக ஹிந்தி பேசும் மய்யப்பகுதியில் ஓபிசி ஒருங்கிணைப்பின் வாய்ப்பு பாஜகவுக்கு கவலை அளிக்கிறது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், ஹிந்தி பேசும் மாநிலங்களில் சமூக நீதி சக்திகளை ஒருங்கிணைப்பதற்காக பாடுபடப் போவதாக அவர் அறிவித்திருப்பது பாஜகவிற்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

* ஓபிசி இட ஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உ.பி அரசின் மனுவை ஜனவரி 4-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மோடி அரசின் தவறான கொள்கையால் 2022இல், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்பட, அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த பட்சம் ஆறு உயர் தேவையுள்ள மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு டிசம்பர் 29 அன்று முடிவடைந்தது. இடங்களை மாநில அரசுக்கு திருப்பி தரவில்லை.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment