செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

செய்திச் சுருக்கம்

புதிய உத்தரவு

சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய 6 நாடுகளில் இருந்து வரும் அனைத்து பன்னாட்டு விமானங்களும் பயணிகளை விமானத்தில் ஏற்றும் முன் கரோனா பரிசோதனை சான்றிதழை பெற்ற பின்பே ஏற்ற வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிப்பு.

குடிநீர்

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகளில் மொத்தம் 10 ஆயிரத்து 793 மி. கன அடி தண்ணீர் இருப்புள்ளது. இது மொத்த கொள்ளளவில் 91.8 விழுக்காடாகும்.

கல்வி உதவி

அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்க மேனாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தகவல்.

பயணம்

மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட 7 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2022ஆம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்.

தடுக்க...

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறி போலி ஜாதிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுக்கும் வகையிலான விதிகளை 8 வாரங்களில் வகுக்க வேண்டுமென்று தமிழ்நாடு  அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

அரசாணை

கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் தகுதி வழங்கும் வழிமுறைகளை உருவாக்கி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உரிமம் ரத்து

ஏரி, குளம், குட்டை மற்றும் கால்வாய்களில் சட்ட விரோதமாக கழிவு நீரை கொட்டினால், லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்.

உத்தரவு

தமிழ்நாட்டில் 3ஆவது தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை நாளை முதல் தொடங்க வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவு.


No comments:

Post a Comment