மதுரை கலந்துரையாடலில் முடிவு
மதுரை, ஜன. 3- மதுரை மாநகர மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 01.01.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில்,மதுரை சோலை அழகுபுரம் சே.முனியசாமியின் தன பாக்கியம் மகாலில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்டத்தலைவர் அ.முருகானந்தம் தலைமை தாங்கினார்.கடவுள் மறுப்பு முழக்கங்களை பகுத் தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் பா.சடகோபன் முழங்க மற்றவர்கள் திருப்பிக் கூறினர்.அனைவரையும் வர வேற்று கழக மண்டல தலைவர் கா.சிவகுருநாதன் உரையாற்றினார்.
கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் தொடக்க உரையில், இந்தப் புத்தாண்டில், தமிழ் நாட்டிலேயே முதலாவதாக நிகழும் கழக நிகழ்ச்சி என்பது இன்று மதுரை யில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டமாகும். தலைமைக் கழகத்தின் சார்பில் தோழர்கள் அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள். தமிழர் தலைவர் அவர்களுக்கு சென் னையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலந்து கொண்ட 90வது பிறந்த நாள் விழாவின் சிறப்புகளை நீங்கள் அறிவீர் கள். அதனைப்போல கம்பம் நகரில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டின் சிறப்புகள் பற்றியும், அதில் உரையாற்றிய அத்தனை அரசியல் கட்சித்தலைவர் களும் ஆசிரியர் வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையும், கம் பம் பகுதி தோழர்கள் உழைப்பால் விளைந்த மாநாட்டு சிறப்புகள் பற்றியும் குறிப்பிட்டு, மதுரை மாநகர் மாவட் டத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக நடத்திய, நடத்தக்கூடிய பொறுப்பாளர்கள்,தோழர்கள் இருக்கி றீர்கள்.
தமிழர் தலைவர் தலைமையில் ஜனவரி 27 மதுரையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி நடை பெற இருக்கும் திறந்து வெளி மாநாடு சிறப்பாக நடைபெறவேண்டும்.அதற் கான கலந்துரையாடல் கூட்டம்தான் இது" எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
தொடர்ந்து முன்னிலை வகித்த தென்மாவட்ட பிரச்சாரக்குழுவின் செயலாளர் தே.எடிசன்ராசா " ஜனவரி 27 திறந்த வெளி மாநாடு சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்கி றேன். அதனைப்போல பிப்ரவரி மாதம் நடைபெறும் தொடர் இயக்கப்பிரச்சார கூட்ட நிகழ்வும் மதுரையில் நடைபெற வேண்டும்.அந்தப் பிரச்சாரக் கூட்ட நிகழ்வுக்கு 60 சதவீத செலவுப்பொறுப் பினை நான் ஏற்றுக்கொள்கிறேன் " என்று அறிவித்து உரையாற்றினார்.அதனைப்போல தலைமை உரையாற் றிய மாவட்டத் தலைவர் அ.முருகா னந்தம் " தமிழர் தலைவர் அறிவிக்கும் எந்த நிகழ்வையும் சிறப்பாக நடத்தும் மதுரை பொறுப்பாளர்களாகிய நாங் கள் இந்த திறந்த வெளி மாநாட்டையும் மிகுந்த எழுச்சியோடு நடத்திக் காட்டு வோம் " என்று குறிப்பிட்டு உரை யாற்றினார்.
மதுரை மாநகர் மாவட்ட அமைப் பாளர் இரா.திருப்பதி தன்னுடைய பங்களிப்பாக ரூ.5000 அறிவித்து, சிறப்பாக நடத்திட இன்னும் கடை வசூல் நடத்திடுவோம் எனக்குறிப் பிட் டார். தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பால்ராஜ் தன்னுடைய பங்களிப்பாக ரூ 3000 அறிவித்து உரை யாற்றினார். மதுரை மாநகர் மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி தன்னுடைய பங்களிப்பாக ரூ 10000 அறிவித்தார்.
தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்ட கழகச்செயலாளர் த.ம.எரி மலை, மாநகர் மாவட்ட துணைத் தலைவர் அனுப்பானடி பவுன்ராசா, மாநில மாணவர் கழக பொறுப்பாளர் செந்தூர் பாண்டி, மாநில வழக்குரை ஞரணி துணைச்செயலாளர் நா.கணே சன், மாநில வழக்குரைஞரணி செயலா ளர் மு.சித்தார்த்தன், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோர் இந்த மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும்,வசூல் செய்து நிதி அளிப்பதாகவும் உறுதி அளித்தனர்.
தொடர்ந்து கழக அமைப்புச் செய லாளர் வே.செல்வம் உரையாற்றினார். நிறைவுரையினை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் உரையாற்றினார்.
நிகழ்வின் முடிவில் கழக மதுரை மாவட்ட துணைச் செயலாளர் இரா. சுரேசு நன்றி கூறினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் பேரா.முனைவர் கு.இராஜவேலு, பேக்கரி கண்ணன், பாலா, செல்லத்துரை, ஆட்டோ செல்வம், வேல்துரை, மாரிமுத்து, திருமங்கலம் முத்துக் கருப்பன், மாணவர் கழகத் தோழர்கள் அறிவுப்பாண்டி, அறிவுச்செல்வி, க.பிச் சைப்பாண்டி, அழகுபாண்டி, செந்தில் குமார், டார்வின், அண்ணா நகர் தனுஷ்கோடி, ரமேஷ், தனசேகரன், ராஜா, கோரா, முரளி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஜனவரி 27ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் திறந்தவெளி மாநாடு மிகச்சிறப்பாக நடைபெறும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கலந்துரையாடல் கூட்டம் மிகவும் எழுச்சியுடன் நடை பெற்றது.

No comments:
Post a Comment