செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

செய்திச் சுருக்கம்

சமர்ப்பிக்க...

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது விமானம், போக்குவரத்து செலவுகள், கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது, தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெற வேண்டிய தலைவர்கள் பட்டியலை 7 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்.

தாலுகா...

தமிழ்நாட்டில் 4 லட்சம் பேருக்கு ஒன்று வீதம் உள்ள தாலுகா அலுவலகங்கள் மேலும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்.

நடவடிக்கை

காலை உணவுத் திட்டத்தை 17 லட்சம் குழந்தை களுக்குக் கொண்டு செல்ல முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்.

தடை

15 ஆண்டுகள் முடிவடைந்த வாகனங்களை இனிமேல் புதுப்பிக்க முடியாது என்றும், இந்த புதிய விதி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், 15 ஆண்டுகள் பழைமையான அனைத்து அரசு வாக னங்களும் ரத்து செய்யப்படும் என ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.

புதுச்சேரியில்...

புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்படும் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தகவல்.


No comments:

Post a Comment