லக்கிம்பூர் கெரி வன்முறை நிகழ்வு ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு பிணை வழங்க எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

லக்கிம்பூர் கெரி வன்முறை நிகழ்வு ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு பிணை வழங்க எதிர்ப்பு

லக்னோ, ஜன. 20- உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில், ஒன்றியஅமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் பிணை மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் திகுனியா என்ற இடத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அக் டோபர் 3ஆ-ம் தேதி விவ சாயிகள் போராட்டம் நடந்தது. அப்போது இந்த கூட்டத்துக்குள், வேகமாக வந்த வாகனம் ஒன்று உள்ளே புகுந்தது. இதில் 8 பேர் உயிரிழந் தனர். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக் காரர்கள் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பாஜக தொண்டர்கள் இருவரை அடித்துக் கொன்றனர். அந்த வாகனத்தில் பய ணம் செய்த ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா தற்போது சிறை யில் உள்ளார்.

அவரது பிணை மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் மகேஸ்வரி ஆகி யோர் அடங்கிய அமர் வில் நேற்று (19.1.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தர பிர தேச அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் கரிமா பிரசாத் வாதிடு கையில், ‘‘இந்த குற்றம் மிக கொடுமையானது. இதில் குற்றவாளிக்கு பிணை வழங்கினால், அது சமூகத்துக்கு தவ றான தகவலை தெரிவிக் கும்’’ என்றார்.

மனுதாரர் ஆசிஸ் மிஸ்ராவின் வழக்குரை ஞர் முகுல் ரோத்கி வாதி டுகையில், ‘‘மனுதாரர் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார். இந்த வழக்கு முடிய 7 அல்லது 8 ஆண்டுகள் ஆகும்’’ என் றார். இந்த விவாதங்களை கேட்ட நீதிபதிகள் பிணை மனு மீதான உத் தரவை ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment