புத்தாண்டு அன்று பெண் கொடூரமாகக் கொல்லப்பட்ட கோர நிகழ்வு பா.ஜ.க. பிரமுகர் கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

புத்தாண்டு அன்று பெண் கொடூரமாகக் கொல்லப்பட்ட கோர நிகழ்வு பா.ஜ.க. பிரமுகர் கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது

புதுடில்லி, ஜன. 7- புத்தாண்டு நாள் அன்று காரில் இழுத்துச் செல்லப் பட்டு கொடூரமாக இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டார், இந்த பயங்கர பாதகச்செயலில் பாஜக பிரமுகர் மனோஜ்மித்தல் குற்ற வாளியாக இருப்பதால் அதை விபத்து என்றும் அந்தப்பெண் போதையில் இருந்தார் என்றும் கூறச்சொல்லி அந்தப் பெண் ணோடு வந்த தோழியை காவல் துறை மிரட்டி வருவதாக பெண்ணு ரிமைப் போராளிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப்பெண் கொலை தொடர் பாக மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளது டில்லி காவல்துறை

டில்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தில் தோழியுடன் அமர்ந்து சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புத்தாண்டு நாள் அன்று தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறு வனம் சார்பிலான பணிகளை இரவு வரை இருந்து முடித்து கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார். அவர் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலை வுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர நிகழ்வு நடந்து உள்ளது. அந்த கார், குறிப்பிட்ட சாலையில் சுற்றி, சுற்றி 4-5 முறை வந்துள்ளது. மொத்தம் 12 கி.மீ. தொலைவுக்கு அந்த பெண்ணின் உடல் இழுத்து செல்லப்பட்டு உள்ளது. இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப் பட்டது. இந்த நிகழ்வில் காரில் இருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். டில்லி மட்டும் இன்றி நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் மேலும் ஒருவரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப் பட்டுள்ள 5 பேரை யும் காப்பாற்ற முயன்ற வழக்கில் அஷுதோஷ் என்பவர் தான் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதே போல், இந்த வழக்கில் தொடர்பு டைய அங்குஷ் கன்னா என்ற மற்றொருவரையும் டில்லி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

டில்லி பெண் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுல்தான் பூரி பகுதி பாஜக வில் பல்வேறு பதவிகளில் இருந்தவர் கடந்த 28ஆம் தேதி அப்பகுதி பாஜக மக்கள் தொடர்பாளராக பதவி உயர்த்தப்பட்டார். 

இவரது நடவடிக்கை குறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அப்பகுதி மக்கள், பாஜக மக்கள் தொடர்பு செயலாளராக உள்ள சஞ்சய் மிட்டல் எந்நேரமும் போதையிலேயே இருக்ககூடியவர், நாள் தோறும் போதையில் யார் மீதாவது காரை ஏற்றிவிட்டு சண்டையிழுத்துவந்துவிடுவார். இவர் முக்கிய கட்சிப் பிரமுகராக இருப்ப தால் காவல்துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் சமா தானம் செய்து அனுப்பி வைத்து விடும் இதனால் இவரது அக்கிர மங்கள் அதிகமாகி தற்போது ஒரு இளம்பெண் படுபயங்கரமாக கொல்லப்பட்டுள்ளார் என்று கூறினார் 

No comments:

Post a Comment