பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய பானை ஓவியப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய பானை ஓவியப் போட்டி

தஞ்சை, ஜன. 7- பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம் கட்டட எழிற்கலை துறையும் மற் றும் கலை கலாச்சார பாரம்பரியத் திற்கான இந்திய தேசிய அறக் கட்டளையும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான பொன்னி நதி நாகரிகம் என்ற தலைப்பில் 04.01.2023 புதன் கிழமை காலை 09.00 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பாரம்பரிய பானை ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 10 பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் பங்கேற் றனர். 

இவ் ஓவியப்போட்டியின் முக் கிய கருத்தாக தமிழ்நாட்டு மக்க ளின் விவசாயம் சார்ந்த ஓவியங்கள் இடம்பெற்றன. இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.வேலுச்சாமி,  கட்டடக் எழிற்கலைத்துறை முதன் மையர் பேரா. சி.வி.சுப்பிரமணியன், துறைத்தலைவர்ணீ பேரா.ஏ.ஆர். ரமேஷ் பாபு, கலை மற்றும் கலாச் சாரப் பாராம்பரியத்திற்கான இந் திய தேசிய அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ரோட்டேரியன் விஜயலட்சுமிபாரதி, ஏ.வி.நடன சிகாமணி, ஆர்.ஜெயசீலன் ஆகி யோர் மாணவர்களின் படைப்பு களை பாராட்டி பரிசுகளை வழங் கினார்கள். 

முதல் பரிசினை கே.என்ஃபாசி யூசுப், எஸ்.சங்கரா, லிட்டில் ஸ்கா லர்ஸ் மெட்ரிக் பள்ளி, தஞ்சாவூர். இரண்டாம் பரிசினை  எஸ் ஹரிணி, பி.ஜமுனா, மகரிசி வித்யா மந்திர் பள்ளி, தஞ்சாவூர், மூன்றாம் பரிசினை அய்.சூரியா, பி.கண்மணி, எம்.எம்.ஏ மேல்நிலைப்பள்ளி பாப் பாநாடு ஆகியோருக்கு வழங்கப்பட் டது. இப்போட்டியினை கட்டட எழிற்கலைத் துறையின் பேரா 

கி.சித்ரா மற்றும் த.சாதனா ஆகியோர் சிறப்பாக இந்நிகழ்வுகளை ஏற் பாடு செய்திருந்தனர். 

No comments:

Post a Comment