திருவண்ணாமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

திருவண்ணாமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம்

திருவண்ணாமலை, ஜன. 7- திருவண்ணா மலை மாவட்ட பகுத்தறிவாளர்  கழகத்தின் கலந்துரையாடல் கூட் டம் 18.12.2022 அன்று காலை 11 மணிக்கு  திருவண்ணாமலை-தண் டராம்பட்டு மெயின் ரோடு. நல்லவன் பாளையம் இராம் குருதி ஆய்வக வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலை வர்  பா. வெங்கட்ராமன்  தலைமை வகித்தார். மாவட்ட திராவிடர் கழக  தலைவர் சி.மூர்த்தி வரவேற் புரை  கூறினார். தனது வர வேற்புரையோடு பகுத்தறிவாளர் கழகத்தின் நிலையும், அதை எப்படி சரி செய்ய வேன்டும் என்பதையும், அதற்கு தாங்கள் எப்படியெல்லம் துணையாக இருப்போம் என்றும் கூறினார்.

தொடர்ந்து.  மாநில ப.க.  துணைத் தலைவர்  அண்ணா சரவணன்  கலந்து ரையாடல் கூட்டத்தினு டைய நோக்கம் பற்றி விரிவாக எடுத்து ரைத்தார். தொடர்ந்து  மாவட்ட  ப.க.  துணைத் தலைவர் பூ.சம்பத் தனது கருத்துகளை  கூறினார்.

ப.க. பொதுச்செயலாளர் ஆ. வெங்கடேசன், மூன்று பொறுப்பா ளர்களது சுற்றுப்பயணம் மற்றும் ஆசிரியர் அவர்களின் பயணம் குறித்தும், பகுத்தறிவாளர்கழகம் செயல்பட வேண்டியது எப்படி என்பது பற்றியும் பேசினார்.

தொடர்ந்து கு. பஞ்சாட்சரம் ஏற்கெனவே இந்த மாவட்டத்தின் நிலை - இப்போது உள்ள நிலை பற்றி பேசினார்.

அடுத்து பேசிய எப்.எஸ்.தேவன்,  ஆசிரியர் ராம்குமார்  ஆகியோர் தங்களுடைய கருத்துகளை  எடுத்து வைத்தார்கள்.

தொடர்ந்து   பகுத்தறிவாளர் கழக  பொதுச்செயலாளர்  வி.மோகன், பகுத்தறிவாளர்கள்  ஏன்  தேவை?  எப்படி  தேவை?  இல்லாவிட்டால் என்ன? என்பது  பற்றியும்  யாருக் காக  நாம்  பாடுபட வேண்டும்? என்பது  பற்றியும், பேசினார்.

தொடர்ந்து  மாநில ப.க.  தலைவர்  இரா. தமிழ்ச்செல்வன் அமைப்பு செயல்பாடுகள்,  கடந்த கால நிகழ்வுகள்,  நடப்பு செயல்பாடுகள், எதிர்கால திட்டமிடல்  ஆகியவை  பற்றியும், எப்படி எல்லாம் இந்த இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பது  பற்றியும், விரிவாக உரையாற்றினார்.

தீர்மனங்களை அண்ணா சரவணன் படித்தார்.

தீர்மானம் 1.

திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழக தலைவர் புலவர் கோ.ஏழுமலை மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.

அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினார்கள்.

தீர்மானம் 2.

ஆசிரியர் அவர்களது 90ஆவது பிறந்த நாள்,,அய்யா நினைவு நாளினையொட்டி கருத்தரங்கம், அல்லது  ஜனவரி மாதத்தில் மாவட்ட அளவில் ப.க. பயிற்சி வகுப்பு நடத்துவது என்றும் ஏக மனதாக தீர்மனிக்கப்பட்டது. இதற்கான பொறுப்பை ஆசிரியர் ப. இராமஜெயம் ஏற்று நடத்திட ஏகமனதாக் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3.

திருவண்ணாமலை மாவட்ட ப.க. அமைப்பை இன்னும் வலுப் படுத்துவது என்றும், புதிய உறுப் பினர்களை சேர்த்திடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 4

பகுத்தறிவு இதழ்களான விடு தலை, தி மாடர்ன்  ரேசனலிஸ்ட், உண்மை, பெரியார் பிஞ்சு ஆகிய வற்றுக்கு சந்தா சேர்ப்பது என தீர்மானிக்கபட்டது.

தீர்மானம் 5.

இனிவரும் காலங்களில் ஒவ் வொரு மாதமும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது என்றும், அதன் தொடர்ச்சியாக மாதாந்தி ரக் கூட்டங்களை நடத்திட நட வடிக்கை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட புதிய பொறுப்பாளர்கள்

தொடர்ந்து  மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன்  திருவண் ணாமலை மாவட்ட புதிய பொறுப் பாளர்களை அறிவித்தார்.

தலைவர்   -   பா. வெங்கட்ராமன்

செயலாளர்   -    ஆசிரியர்  ராம ஜெயம்  

துணைத் தலைவர் -    பூ சம்பத்

துணைச் செயலாளர் - ஜெ சக்தி வேல்

அமைப்பாளர் - சி.மனோகரன்

இறுதியில்  மு.க.இராம்குமார் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

No comments:

Post a Comment