பெரியார் விருது பெற்ற நெப்போலியன் எனும் அருண்மொழி பற்றி... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

பெரியார் விருது பெற்ற நெப்போலியன் எனும் அருண்மொழி பற்றி...

இசை என்பது இயற்கையின் கொடை!  வண்டு துளைத்த மூங்கிலுக் குள் காற்று நுழைந்து இசையாகிறது! யார் அதற்கு கற்றுக் கொடுத்தது? அதே மூங்கில், புல்லாங்குழல் ஆக்கப் பட்டால்? கற்காமல் ஏன் முடியாது என்று யாரும் கேட்கவில்லை. செய்து காட்டினார் ஒருவர்!

”நான் தேங்கி நிற்கவில்லை. ஒரு நதியைப் போல ஓடிக்கொண்டிருந்தேன். குழலிசை என்னைத் தேடி வந்து கலந்துவிட்டது” என்று கவித்துவமாகக் கூறுகிறார்.

இந்த அடக்கமும், விடாமுயற்சியும் இவரை குழலிசையில் எட்டாத உயரத்தை எட்ட வைத்திருக்கின்றன!

அந்த உயரத்துக்குச் சொந்தக்காரர் தான் இந்த, ”நெப்போலியன் எனும் அருண்மொழி!”

8-12-1951 இல் தஞ்சாவூர் நன்னிலத் துக்கு அருகிலுள்ள திருக்கண்டீசுவரம் எனும் சிறு கிராமத்தில் பிறந்த இவருக்கு மட்டுமல்ல, அந்த கிராமத்திற்கும்கூட இசையுடன் எந்தத் தொடர் பும் இல்லை.

தனது 13 ஆம் வயதில் கோயில் திருவிழா வுக்குப் போனவர், கொண்டாட்டத்துடன் திரும்பாமல், ஏனோ புல்லாங் குழல் விற்கும் வியாபாரியை ஏக் கத்துடன் பார்த்திருக்கிறார். பார்த்ததை யெல்லாம் வாங்கத்தூண்டும் சிறுவ னின் ஆசையைப் போலல்லாமல், புல்லாங் குழலை வாசிக்க வேண்டும் என்கிற ஆவல் அங்கேயே இவருக்கு ஊற்றெடுத்திருக்கிறது. ஆனால், கையில் பைசா இல்லை.

தந்தை செல்வராஜிடமும், தாயார் செலின் மேரியிடமும் அடம்பிடித்து காசு வாங்குகிறார்! திருவிழாவில் விற்ற ஒரு புல்லாங்குழலை 15 பைசா கொடுத்து வாங்குகிறார். 1960 களில் 15 பைசாவே பெரியதுதான்!   

அங்கேயே வாசித்திருக்கிறார்! சிறு வன் இப்படி வாசித்து விட்டானே? என்று ஊர் மக்கள் வியக்கின்றனர். 

நெப்போலியனுக்கு குழலிசையில் இனம் புரியாத காதல் மலர்ந்துவிட்டது!

அந்தப் புல்லாங்குழலை யார் கண் களிலும் படாமல் மறைத்து வைத்து பயன்படுத்துகிறார்! 

வெகு மக்கள் முன்னிலையில் இவர் வாசித்த முதல் பாடல், 1970 களில் வெளிவந்த ”சித்திரை மாதம் பவுர்ணமி நேரம்” என்ற பாடல்தான்! 

சென்னைக்கு சென்று சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக் கிறார். அதெல்லாம் முடியுமா என்று பகடி செய்திருக்கிறார்கள். ”பார்த்துவிடலாம்” என்று சென்னைக்கு வந்துவிட்டார். 

முதல் சந்திப்பிலேயே இசைமேதை ஜி.ராம நாதன் மகன் கண்ணன் மூலம் ஒரு இசைக்கச் சேரியில் வாசித்தார்! அங்கே வாசித்த முதல் பாடல், “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” என்ற பாடல்தான்! 

அதே கண்ணன் இவரை இசை யமைப்பாளர் சங்கர் கணேஷ் ரிக் கார்டிங் தியேட்டருக்கு பார்வையாள ராக அழைத்துச் சென்றிருக்கிறார். பார் வையாளராகச் சென்றவர் புல்லாங் குழல் இசைக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்! 

படத்தின் பெயர் ”சங்கர்ஸம்” மலையாளத் திரைப்படம்! முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டதால், மிகக் குறுகிய காலத்திலேயே பல்வேறு மொழிகளில் ஏறக்குறைய எல்லா இசையமைபாளர்களின் திரைப் படங்களிலும் புல்லாங்குழல் வாசிக்கும் வாய்ப்பை பெற்று, இன்று வரை 1,100 திரைப்படங்களில் புல்லாங் குழல் இசைத் திருக்கிறார்.

இவர் வாழ்வின் மற்றொரு திருப்புமுனை அதே 1984ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது. சென்னை பிரசாத் லேப்பில் ஓய்வு நேரத்தில், அக்கம்பக்கத்தில் யாருமில்லையென்று இவர் புல்லாங்குழல் வாசித்து பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வந்து, “சார் உங்களைப் பார்க்க வேண்டும் என்று அழைத்திருக்கிறார். வியப்புடன் சென்று பார்க்கிறார்! 

அந்த சார், இசைஞானி இளைய ராஜா!

பிறகு, இந்தக் குழலிசை நதி, இளைய ராஜா எனும் வற்றாத இசை நதியுடன் கலந்துவிட்டது!

“நீ எவ்வளவு உயரத்துக்கு வேண்டு மானாலும் போ! ஆனால், நீ எனக்கும் வாசிக்க வேண்டும்” என்று இளையராஜா உரிமையுடன் சொன்னதை, பெருமை யுடன் குறிப் பிடுகிறார்!

1988இல் மீண்டும் ஒருமுறை தேடிப் போகாம லேயே பின்னணிப் பாடகராகும் வாய்ப்பு வந் தது. அதுவும் கலைஞானி கமல்ஹாசனுக்கே குரல் கொடுக்கும் வாய்ப்பு! இதுவும் இசைஞானி யால் வந்ததுதான்! 

படம் சூரசம்ஹாரம்! பாடல், ‘நான் என்பது நீ அல்லவோ தேவதேவி!

குழலிசையை நெப்போலியன் என்னும் பெயரில் வழங்கிக் கொண்டி ருந்தவரை, குர லிசை ‘அருண்மொழி’ ஆக்கியது. 

தேனிசைத் தென்றல் தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் உள்ளிட்டோர் மூலம் 500 க்கும் மேற்பட்ட திரைப் படப் பாடல்களை பாடியிருக்கிறார். ஒவ்வொன்றும் இவரது தனித் தன்மையைச் சொல்பவை! அதுமட்டு மல்ல, 8 திரைப்படப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

குழலிசைக் குரலோன்! தேன் குரலோன்! 

40 ஆண்டுகளாக இளைய ராஜாவிடம் திட்டு வாங்காத ஒரே ஜீவன்! என்றும் இவரைச் செல்ல மாகச் சுட்டுகிறார்கள். ஆம் 1984 இல் தொடங்கிய இவருடைய இசைப்பயணம் இன்றும் தொடர் கிறது.

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, நார்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்சு, சுவீடன், டென்மார்க், சிறீலங்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி களில் பங்கேற்றிருக்கிறார்.

பின்னணிப்பாடகராக இவரது தெளிவான தமிழ் உச்சரிப்புக்கென்றே ரசிகர்கள் ஏராளம் உண்டு!

குழலிசையா? குரலிசையா? என்றால், ”குழலிசை”தான் எனது அடையாளம் என்கிறார்!

இப்படி எந்த முன்மாதிரியோ, பொருளாதாரப் பின்னணியோ, இசைப் பாரம்பரியமோ இல்லா மல், ”எனது அறிவு இசையில் இருக்கிறது, என் னால் முடியும்!” என்று முயன்று, குழலிசையில் உச்சத்தைத் தொட்டிருக்கும் தமிழ் இன மொழி உணர்வாளர் ”நெப்போலியன் எனும் அருண் மொழி”க்கு 2023 ஆம் ஆண்டுக்கான, ”பெரியார் விருது” வழங்குவதில், ”தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்” பெருமிதமும், பேருவகையும் கொள்கிறது.

(தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் பெரியார் விருது பெற்றபோது (17.1.2023) வாசிக் கப்பட்டது.

No comments:

Post a Comment