பெரியார் விருது பெற்ற பெரியாரிய சிந்தனையாளர் சுபகுணராஜன் பற்றி... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

பெரியார் விருது பெற்ற பெரியாரிய சிந்தனையாளர் சுபகுணராஜன் பற்றி...

ஆலமரம் தனது வேர்களை வலுப் படுத்த, விழுதுகளை ஆழ ஊன்றிக் கொள்ளும்! அதனால் விழுதுகள் வலு வடையும். பின்னர் அது தாய்மரத்தையே தாங்கும்!

ஆலமரம், திராவிடர் இயக்கம்! விழுதுகள், அதன் தொண்டர்கள்!

ஒற்றை நபராய் முன்வந்து சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கி, நீதிக்கட்சியையும் இணைத்துக்கொண்டு திராவிடர் கழகத்தை நிறுவிய தந்தை பெரியார்தான் அந்த ஆலமரம்! அவ ரைப் பின்பற்றியவர்கள் அனைவரும் அந்த ஆலமரத்தின் விழுதுகள்தாம்!

அந்த ஆயிரமாயிரம் விழுதுகளில் ஒன்றுக்குப் பெயர் வீ.மா.ச.சுபகுணராஜன்!

இவர், 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், தாடிக்கொம்பு கிராமத்தில் பிறந்தார். அப்பா  வீரணன், அம்மா ரேச்சல் சுந்தரி. இருவரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாவர். இவர் நான்காவது பிள்ளை! கடைக்குட்டி! 

மூத்த சகோதரிகள் இருவர்! 

மூத்த சகோதரர் ஒருவர்!

ஆரம்பக் கல்வியை அம்மா, அப்பா விடமே அவர்கள் பணிபுரிந்த ஊர் களிலேயே கற்க வாய்ப்புக் கிடைத்தது. திண்டுக்கல் நகரின் டட்லி மற்றும் தூய மரியன்னைப் உயர்நிலைப் பள்ளிகளில் படித்தார். இளநிலை கல்வியாக ஆங்கில இலக்கியத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், முதுநிலைக் கல்வியை தூத்துக்குடி  வ.உ.சி கல்லூரியிலும் கற்றார். 

அப்பாவின் திராவிட இயக்க சார்பு நிலை, பிள்ளைகளிடமும் ஒரு தாக் கத்தை உருவாக்கியது. 1960 களின் தொடக்கத்தில் கல்லூரிகளில் படித்த அக்காவும், அண்ணனும்  திராவிட சார்பு நிலையில் உறுதிப்பட்டனர். தனித் தமிழ் இயக்க சார்பும், திராவிட முன் னேற்றக் கழகச் சார்பும் அதன் தொடர்ச்சியானது. இந்தச் சூழலில் வளர்ந்ததால் திராவிடம், பெரியார் சிந்தனைகள் குறித்த அறிமுகம் இளம் பருவத்திலேயே வாய்த்தது. 

1970களில் தி.மு.க மாணவரணிச் செயல் பாடுகளில் ஈடுபாடு கொண்டி ருந்தார் சுபகுண ராஜன். கல்லூரிப் படிப்பு முடிவடைந்ததும் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை முதுநிலை ஆய்வாள ராகவும், பின்னர் ஒன்றிய அரசின் சுங்கம் மற்றும் கலால்துறை ஆய்வாள ராகவும் பணிபுரிந்து, கண்காணிப்பாளராக பணி ஓய்வு பெற்றார். 

பணிக்காலத்திலும் திராவிட இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். கலைத்துறையில், குறிப்பாக நாடகங்கள், திரைப் படங்கள் ஆகியவற்றில் பங்காற்றியுள்ளார். 1997 ஆம் ஆண்டில் பேராசிரியர் க.சிவத்தம்பி அவர்கள் தலைமையேற்ற “திராவிடக் கருத்திய லும் அதன் பொருத்தப்பாடும்” என்ற மூன்று நாள் ஆய்வரங்கை, மதுரை அமெரிக்கன் கல் லூரி வளாகத்தில், “மதுரை ஆராய்ச்சி வட்டம்” எனும் அமைப்பு மூலமாக நடத்தியிருக்கிறார். பேராசிரியரகள் அ. மார்க்ஸ், தொ. பரம சிவன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட அறிஞர் கள் பலரையும் அழைத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்து பலரது கவனத்தையும் ஈர்த் திருக்கிறார்.  

பணி ஓய்வுக்குப் பிறகு முழுநேர எழுத்தாளனாக செயல்பட்டு வருகிறார். ‘காட்சிப் பிழை‘ எனும் திரைப்பட ஆய்விதழினையும், ‘அகம் புறம்‘ எனும் சமூகப் பண்பாட்டு ஆய்விதழையும் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தியிருக் கிறார். கயல் கவின் பதிப்பகம் மூலமாக, திராவிட இயக்க ஆய்வு நூல்களை எழுதிப் பதிப்பித்துள்ளார். ‘ஜாதிய சினிமாவும் கலாச்சார சினிமாவும்’, ‘ஜாதி’, ’மூலதனம்’, ’நிலம்’ ’காலனியம்‘ ஆகிய நூல்களை எழுதி தொண்டாற்றியுள்ளார். பெரியாரின், ’ஜாதிச்சங்க மாநாட்டு உரைகளை‘ ’நமக்கேன் இந்த இழிநிலை‘ எனும் தொகுப்பு நூலாகப் பதிப்பித் துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள ‘ஜிலீமீ ஸிuறீமீ ளியீ tலீமீ சிஷீனீனீஷீஸீமீக்ஷீ‘ நூலை முனைவர்கள் ராஜன்குறை கிருஷ்ணன், ரவீந்திரன் சிறீராமச் சந்திரன் ஆகியோருடன் இணைந்து எழுதி யுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத் தியல் வரலாறை சொல்லும் இப்புத்தகம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக வெளி யீடாக வந்துள்ளது. 

பெரியாரை பேசா நாளெல்லாம் பிறவாநாள் என்று கருதக்கூடியவர்!  

இவரது இணையர் ச.சுதந்திரதேவி! மருத்துவம் பயின்று, மதுரை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மகப்பேறு பேரா சிரியராகவும், மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகள் கவிதாவும் மகப்பேறு மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்று சென்னையில் மகப்பேறின்மை தொடர்பான சிறப்பு மருத்துவமனை நடத்தி வருகிறார். மகன் ராஜமகேந்திரன் முதுநிலை வணிக மேலாண்மை கல்வி கற்று தொழில் துறையில் ஈடுபட்டு வருகிறார். கயல், சூர்யா, இனியா, யாழினி என நான்கு பேரக் குழந்தைகள் உள்ளனர்.  

குடும்பமே திராவிடர் இயக்கத்தால் மொட்டாகி, மலர்ந்து, காய்த்து, கனிந்து இன்று தான் பெற்ற பயனை, அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் அளவில் வளர்ந்து, இவரது குடும்பமே ஒரு கொள்கை ஆலமரமாக வளர்ந்தோங்கி நிற்கிறது.  

நமது இனமீட்புப் போரில் பரம்பரை பரம்பரையாகக் களத்தில் நின்று, தாய்க்கழகத்தின் வேரைத் தாங்கி நிற்கும் விழுதான சுபகுணராஜன் அவர்களது பணிகளைப் பாராட்டி, தனயனை உச்சி முகரும் தாய்போல, 2023 ஆண்டிற்கான ‘பெரியார் விருது’ வழங்கி, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம், பெரு மிதமும், தன்னிறைவும் கொள்கிறது.

(தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத் தின்  சார்பில் நடைபெற்ற திராவிட திரு நாளின் போது  (17.1.2023) வாசிக்கப்பட்டது.

No comments:

Post a Comment