வாசிப்பு திறன் அனைவருக்கும் அவசியம் மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

வாசிப்பு திறன் அனைவருக்கும் அவசியம் மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து



சென்னை, ஜன. 19- அனைவரும் புத்தக வாசிப்பு பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று திமுக நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

பபாசியின் 46ஆவது சென்னை புத்தகக் காட்சி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டு சிறைத் துறைக்கு ஒரு அரங்கம் (எண் 286) ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இந்த அரங்கத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலை நூலகங்களுக்காக புத்தகங்கள் சேகரிக்கப் படுகின்றன. அதன்படி கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் பலர், தங்களுக்குப் பிடித்தமான நூல்களை சிறை வாசிகளுக்காக கொடையாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை புத்தகக் காட்சியை 17.1.2023 அன்று பார்வையிட்டார். அப்போது சிறைத் துறையின் அரங்கத்தில் கைதிகளுக்காக 150 புத்த கங்களை கொடையாக வழங்கினார்.அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: புத்தக வாசிப்புதான் சிறந்த சமூகத்தை உருவாக்கும். எனவே, அனைவரும் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி கொள் வது அவசியமானது. புத்தகங்களுக்கு என்றும் அழி வில்லை. தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னர் நூல்கள் டிஜிட்டல் பரிணாமத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.

தற்போது அலைபேசி, கணினி வழியாக புத்தகங்க ளைப் படிக்க முடிக்கிறது. எந்தப் புத்தகம் நன்றாக இருக்கிறது என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, நமக்கு கிடைக்கும் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும். அதில் உள்ள கருத்துகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதுவும் ஒரு அனுபவமாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment