Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
January 03, 2023 • Viduthalai

 நம் உடலை - உறுப்புகளை - அறிவோம்!

 நாம் அனைவரும் நம் உடலையும், உறுப்புகளையும் நன்கு அறிய வேண்டியது அவசியம்.

மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ள சில முக்கிய தகவல்கள் - உடல் நலம் பற்றியவற்றை - வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கும் பெரும் பயன் அளிக்கும்!

மனம் (Mind) என்பதற்கும், குடலுக்கும் (Gut) - இரண்டுக்கும் இரு வழித் தொடர்பு எப்போதும் உண்டு. 

விடுமுறைகளில் நாம் அதிகம் ஓய்வுடன் இருப்பதால் சாப்பிடுகிறோம், படுத்துத் தூங்கு கிறோம், அல்லது 'தொலைக்காட்சியே சரணம்' என்று நாள்களைக் கழிக்கிறோம். அதன் முக்கிய விளைவு, அதிக நேரம் இப்படிப் பணி ஏதும் செய்யாமல் இருப்பதால் நம் செரிமானக் கருவிகள் சரியாக வேலை செய்யாமல் மன அழுத்தமும் சேர்ந்து கொண்டு, அஜீரணம் ஏற்பட  பொதுவாக, வேகப்படுத்தும் நிலையும் தவிர்க்கப் பட முடியாதது!

மன அழுத்தம் (Stress) இருந்தாலே உணவு செரிமானம் ஆவது கடினம்; அதேபோல அதிக கோபத்துடன் உள்ளபோதும் அதே நிலைமை தான்!

உண்டவுடன் படுப்பது, ஆத்திரப்படும் நிலைக்கு நம்மை ஆளாக்கிக் கொள்வது போன்ற நிலை ஏற்படும்போது தொடர்ந்து வயிற்றுக் கோளாறு, வயிற்றுப் பொருமல் ஏற்படக் கூடும்.

IBS என்று டாக்டர்களால் அழைக்கப்படும். Irritable Bowel Syndrome    என்பது - துக்கம், அதிகமான சிந்தனை, மனக் குழப்பம், கவலை உள்ளவர்களுக்கும்  வழக்கமாக இது ஏற்படக் கூடும். எப்போதும் மலம் வருவதுபோல உணர்வு இருக்கும்; ஆனால் வராது! அதனால் நம் பணிகளில் முழுக் கவனம் செலுத்த இயலாது!

அதுபோலவே GERD என்ற சாப்பிட்ட பிறகு உணவுக் குழாய் மூலம் குடலுக்குள் சென்று அதன் இயல்பான செரிமானப் பணியைச் செய்வதில் சிக்கலை ஏற்படுத்தி ஒரு வகை ஏப்பம் இவைகள் வரலாம்.

அதனால் மதிய தூக்கம் - இரவு சாப்பிட்டவுடன் படுக்காமல் - சுமார் 1  மணி அல்லது 1லு மணி நேரம் கழித்துப் படுத்தால் இம்மாதிரியான சிக்கல்கள் ஏற்படாமல் தப்பிக்க முடியும்.

வயதான முது குடிமக்கள் பலருக்கு முக்கிய உடல் பிரச்சினை - மலச்சிக்கல் தான்.  தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலையில் மலம் கழிக்கும் வழக்கத்திற்கு உடல் கடிகாரத்தைப் பழக்குவது இதற்குத் துணை புரியக் கூடும்.

Stress என்ற மன உளைச்சல் மூளைக்கும், குடலுக்கும் உள்ள வழமையான தொடர்பு ஆணைகளை வழங்கும்போது  ஒரு வகைத் தடங்கலை ஏற்படுத்துவதால் பெரும் பாதிப்பு ஏற் படும் என்று கூறுகிறார்; பிரபல வயிறு மருத்துவ ரான  Katherin N. Thomas என்பவர் சிகாகோ மருத்துவ மனையின் (North Western Digestive Health Centre)  டாக்டர் - இந்த அம்மையார்.

மனஅமைதியை வரவழைத்துப் படிக்கவும், தகுந்த உடற்பயிற்சிகளை செய்வதின்மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் செம்மையாக இயங்கும் வண்ணம் செய்து நல்வாழ்வு பெற முடியும். காலையில் எழுந்தவுடன் சிலர் தண்ணீர் குடிப்பது வழமைதான் என்றாலும், Water therapy  என்பதை  கடைப்பிடிக்கும் வகையில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், சிறுநீரகம் (கிட்னி) - அது அதிகமான வேலையினால் தனதுசக்தியை இழப்பதற்குக்கூட வாய்ப்பு ஏற்படும்.

பொதுவாக, அளவுக்கு மிஞ்சினால் எதுவும் சரியாக இருக்காது! எனவே உணவாக இருந்தாலும், குடிநீராக இருந்தாலும், நடைப் பயிற்சியாக இருந்தாலும், உடற் பயிற்சியாக இருந்தாலும் அளவோடு செய்தால் முழுப் பலன் கிடைக்கும்! இன்றேல் எதிர் விளைவுதான்!

மறவாதீர்! நினைவில் நிறுத்தி செயல்படுவீர்!

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn