பிஜேபி ஆளும் கருநாடகத்தில் ஊழலோ ஊழல்! தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

பிஜேபி ஆளும் கருநாடகத்தில் ஊழலோ ஊழல்! தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்

பெங்களூரு, ஜன.3 கருநாடக மாநிலத்தில் 47 வயதான தொழி லதிபர் காருக்குள் தன்னைத் தானே தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது சாவுக்கு காரணம் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் அரவிந்த் லிம்பா வலி மற்றும்  பாஜக பிரமுகர்கள் என்று கடிதம் எழுதி உள்ளார். 

புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கருநாடக மாநி லத்தில் 47வயது இளம் தொழிலதிபர் ஒருவர் பாஜக சட்ட மன்ற உறுப் பினரின் மிரட்டல் காரணமாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம் பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. இந்த தொழி லதிபர் பெங்களூரு புறநகர் பகுதி யில் வசித்து வருகிறார். இவர் காருக் குள் தன்னைத்தானே தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றிய நிலையில், அவரது காருக்குள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 8 பக்க கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தனது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விரிவாக எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில்,    சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் லிம்பாவலி உட்பட 6 பாஜக பிர முகர்கள் தான் தனது தற்கொலை நடவடிக்கைக்கு காரணமான வர்கள் என்று குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியைம் ஏற்படுத்தி உள்ளது.

உலகமே புத்தாண்டு கொண் டாடத்தில் இருந்த போது தொழி லதிபர் மிகவும் வருத்தமுடன் காணப்பட்டார் அவர் தனியார் விடுதியில் இருந்துவீட்டிற்குச் செல்வதாக கூறினார்.  வீட்டிற்குச் சென்று, இறப்புக் குறிப்பை எழுதி வைத்துவிட்டு ஓடும் காரில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்  என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 எச்.எஸ்.ஆ.ர் லேஅவுட் அருகே வரவிருக்கும் அடுக்குமாடி திட்டத் தில் பிரதீப் சுமார் ரூ. 1.5 கோடி முதலீடு செய்திருந்தார், மேலும் பங்கு தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அவர் தனது வீட்டை விற்று கடன் வாங்கி பணம் திரட்டினார்,  இதனால் ஏற்பட்ட  பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள் ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். ஆனால் அவரிடம் தொடர்ந்து பெரும் தொகையை கேட்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர் நெருக்கடி கொடுத்ததாக தங்களிடம் கூறியதாக தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபரின் உறவி னர்கள் கூறியுள்ளனர்.   இது தொடர் பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment