தமிழ்நாடு அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

தமிழ்நாடு அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மரியாதை

தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

சென்னை - டிச. 14- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்ன தாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (14.12.2022) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற வுடன் தந்தை பெரியார் நினைவிடத் திற்கு வந்தவுடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்.  

பின்னர், அவருக்கு ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திராவிட இயக்க நூல்களை வழங்கிப் பாராட்டினார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் நினைவிடத்திலும், அன்னை மணியம் மையார் நினைவிடத்திலும், சுயமரியா தைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவி யும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் 

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள் ளிட்ட கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, போக்குவ ரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, சி.வி.எம்.அ. எழிலரசன், மேனாள் சட்டமன்ற உறுப் பினர் ரவிச்சந்திரன், தி.மு.க. பகுதி நிருவாகி கோ.ஏகப்பன் மற்றும் தி.மு.க. நிருவாகிகள் பெருந்திரளாக இந்நிகழ் வில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment