திராவிடர் கழகத் தலைவருடன் யூனியன் வங்கி ஓபிசி நல சங்க நிர்வாகிகள் சந்திப்பு பெரியார் உலக நன்கொடை வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

திராவிடர் கழகத் தலைவருடன் யூனியன் வங்கி ஓபிசி நல சங்க நிர்வாகிகள் சந்திப்பு பெரியார் உலக நன்கொடை வழங்கல்

13.12.2022 அன்று யூனியன் வங்கி தமிழ் மாநில ஓபிசி சங்கத்தின் நிர்வாகிகள், கோ.கருணாநிதி தலைவர், கே.சந்திரன் - ஆலோசகர், எஸ்.நடராஜன் - பொதுச் செயலாளர், எம்.பாக்யராஜ், துணைப் பொதுச் செயலாளர், ஜி.சரஸ்வதி - பொருளாளர், பி.லோகேஷ் பிரபு, பிராந்திய செயலாளர்,  மற்றும் துணைத் தலைவர் சி.பி.குணசேகரன் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து அவரது 90ஆவது பிறந்தநாளை (2.12.2022) முன்னிட்டு வாழ்த்துகளையும் மகிழ்வையும் தெரிவித்தனர். திருச்சி அருகே கட்டப்பட்டு வரும் பெரியார் உலகிற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கப்பட்டது. 8 ஜனவரி 2023 அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நலச் சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறுவன தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற அழைப்பு கடிதம் தரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் உடன் இருந்தார்.


No comments:

Post a Comment