செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

செய்திச் சுருக்கம்

ஒதுக்கீடு

305 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கல்விச் சூழலை மேம்படுத்த ரூ.8.37 கோடி நிதியை விடுவிக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல்.

தேர்வு

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவி கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்து  www.tnps.gov.in என்ற இணைய தளத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கிருஷ்ணா நீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண் டுக்கு 330 கன அடியாக வந்து கொண் டிருக்கிறது.

நடுவர் மன்றம்

பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர் பான வழக்கில் ஒன்றிய அரசின் கோரிக் கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், மூன்று மாதத்தில் நடுவர் மன்றம் அமைப் பது தொடர்பான பணியை முடிக்க வேண்டும் என உத்தரவு.

வரி வசூல்

இணையதளம் மூலம் வரி வசூல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் களுக்கு ஊராட்சி ஆணையர் வலி யுறுத்தல்.

கோரிக்கை

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளுர் மாவட்டங்களில் களிமண்ணை இலவசமாக எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வேண்டும் என மண் பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை.

பணியிடங்கள்

2021ஆம் ஆண்டுமார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பல்வேறு பதவிகள் என 9,79,327 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அய்.ஏ.எஸ். பணியிடங்கள்

2022ஆம் ஆண்டு மாநிலங்கள் வாரியாக அனுமதிக்கப்பட்ட அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 6,789 ஆகும். இதில் 5317 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 1472 இடங்கள் காலியாக உள்ளது.


No comments:

Post a Comment