கடல்வாழ் உயிரினங்களில் 10 விழுக்காடு அழிவின் விளிம்பில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

கடல்வாழ் உயிரினங்களில் 10 விழுக்காடு அழிவின் விளிம்பில்...

கடல்வாழ் உயிரினங்களில் சுமார் 10 விழுக் காடு அழிவின் விளிம்பில் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மனிதர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால் கடல்வாழ் உயிரினங்களில் 10 விழுக்காடு முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலை அது வெளியிட்டிருக்கிறது. பருவநிலை மாற்றம், தூய்மைக் கேடு, நீடித்து நிலைத்திருக்க முடியாத மீன்பிடி நடவடிக்கைகள் ஆகியவற்றால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப் படுகின்றன.

குறிப்பாகக் கடற்பசுக்கள் எனப்படும் பாலூட்டி வகை விலங்குகள், அழிந்து போகலாம் என்று  கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கிழக்காப்பிரிக்கக் கண்டத்தில் அவற்றின் இருப் பிடங்கள், படிம எரிபொருள் உற்பத்தியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆகவே கடற் பசுக்களின் தொகை 250க்கும் குறைவாக உள்ளது.

பல்லுயிரியல் தொடர்பான அய்க்கிய நாட்டு அமைப்பின் உச்சநிலை மாநாடு தற்போது கனடா வில் நடைபெறுகிறது. இவ்வேளையில் இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் சிவப்புப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அய்க்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் (கிஸீtஷீஸீவீஷீ நிutமீக்ஷீக்ஷீமீs), விலங்குகளின் வாழ்விடம் அழிவதை நிறுத்தி, அவற்றைச் சரிகட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment