விமானப் படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

விமானப் படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க முடிவு

புதுடில்லி,டிச.14- இந்திய விமானப் படையில் கருடா கமாண்டோ படைப் பிரிவு 2004ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். இந்திய விமா னப் படையின் கருடா கமாண்டோ படையில், பாலின சமத்துவத்தைப் போற்றும் வகையில் பெண் அதிகாரி களையும் சேர்க்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து விமானப் படைமூத்த அதிகாரி ஒருவர் நேற்று (12.12.2022) கூறியதாவது: கருடா கமாண்டோ படையில் விரைவில் பெண் அதிகாரி கள் சேர்க்கப்படுவர். அவர்கள் மரைன் கமாண்டோக்கள் (மார்க்கோஸ்) என்று அழைக்கப்படுவர்.

தேர்வில் பாகுபாடு இருக்காது

ஏற்கெனவே இந்திய கடற்படையி லும் பெண் அதிகாரிகளை சிறப்புப் பிரிவில் சேர்த்து வரும் நிலையில் தற் போது விமானப் படையிலும் பெண்க ளைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள் ளது. அதேநேரத்தில் ஆள் தேர்வில் எந்தவித பாகுபாடும் இருக்காது. ஆண் களைச் சேர்ப்பதற்கு என்னென்ன விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகி றதோ அவை அனைத்தும் பெண் அதிகாரிகளைத் தேர்வு செய்யும்போது கடைப்பிடிக்கப்படும்.

கமாண்டோ படையில் பெண் அதிகாரிகளைச் சேர்ப்பதற்கு முன்பு அவர்களிடம் அதற்கு ஒப்புதல் பெறப் படும். தாமாகவே முன்வந்தால் மட் டுமே அவர்கள் கமாண்டோ படையில் சேர்க்கப்படுவர். இவ்வாறு அவர் கூறி னார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல்விமா னப் படையின் போர் விமானங்களிலும் பெண் அதிகாரிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைப் போலவே இந்தியகடற்படையிலும் போர்க் கப்பல்களில் பெண் அதிகாரி களை பணியில் அமர்த்த முடிவு செய் யப்பட்டது. அதேபோல் ராணுவத்தில் உள்ள ஹெலிகாப்டர்களை இயக்கும் பொறுப்பில் பெண் பைலட்டுகள் நியமிக்கப்பட்டனர். ஆனாலும், ராணு வத்தின் காலாட் படை பிரிவில் கவச வாகனங்களை இயக்கும் பொறுப்பிலும், நேருக்கு நேர் போர் புரியும் பொறுப் பிலும் பெண்கள் இன்னும் சேர்க்கப் படவில்லை.


No comments:

Post a Comment