சென்னை அமெரிக்க மய்யத்தில் நாசாவின் செவ்வாய்க் கோள் விண்கலம் மாதிரி கண்காட்சி: மாணவர்கள் - பொதுமக்கள் காணலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

சென்னை அமெரிக்க மய்யத்தில் நாசாவின் செவ்வாய்க் கோள் விண்கலம் மாதிரி கண்காட்சி: மாணவர்கள் - பொதுமக்கள் காணலாம்

சென்னையில் உள்ள அமெரிக்க மய்யத்தில் நாசாவின் செவ்வாய்க் கோள் விண்கலம் ‘ஆபர்ச்சூனிட்டி’யின் மாதிரி கண்காட்சியை மாணவர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நிர்வாக அமைப்பான‌ நாசாவின் மார்ஸ் ரோவர் ‘ஆபர்ச்சூனிட்டி’யின் முழு அளவிலான மாதிரியின் கண்காட்சியானது, சென்னை யில் உள்ள அமெரிக்க மய்யத்தில் கடந்த 8ஆம் தேதி அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவி னால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது, இந்தியாவிற்கான‌ புல்பிரைட்-நேரு திட்ட அறிஞர் வெங்கடேசுவரன் நாராயண சுவாமி உடன் இருந்தார். ‘மார்ஸ் ரோவர்’ எனப்படும் இந்த செவ்வாய்க் கோள் தரையுலாவி (ரோவர்) கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்களை சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் அமைந்திருக்கும் அமெரிக்க மய்யம் வரவேற்கிறது. கார் னெல் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முழு அளவிலான மாதிரி, வாசிங்டன்னில் உள்ள ஸ்மித்சோனியனின் விமான மற்றும் விண்வெளி அருங்காட் சியகத்திலும், துபாய் 2020 பன்னாட்டு கண்காட்சியின் போது அமெரிக்க அரங்கிலும் காட்சிக்கு வைக்கப்பட்டு, பின்னர் தற்போது சென்னை வந்தடைந்துள்ளது.

இந்த தற்காலிக கண்காட்சியின் போது செவ்வாய் கோள் ஆய்வு குறித்த பல்வேறு செயல்பாடுகள் பற்றி பள்ளி மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த கண் காட்சியானது வருகிற ஜனவரி வரை, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தி ருக்கும். தங்கள் மாணவர்களை அழைத்து வர விரும்பும் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமெரிக்க மய்யத்தைத் ChennaiAmCenter@state.gov  என்ற மின்னஞ்சல் மற்றும் 044-2857-4223 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள‌ வேண்டும்.

2003இல் தன் பயணத்தை தொடங்கிய நாசாவின் ‘’ஆபர்ச்சூனிட்டி’’ செவ்வாய் கோளின் மேற்பரப்பில் நீர் இருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும் நோக்கத்துடன் 2004 இல் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. செவ்வாய் கோளில் முன்னர் நீர் இருந்ததற்கான சான்றுகள் மற்றும் அந்த சமயத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக செவ்வாய் கிரகம் இருந்திருக்கக் கூடும் உள்ளிட்ட பல முக்கிய கண்டுபி டிப்புகளை தனது பணியின் போது “ஆபர்ச்சூனிட்டி” மேற் கொண்டது. திட்டமிடப்பட்ட காலம் 90 நாள்களாக இருந்த போதும், செவ்வாய் கோளின் நிலப்பரப்பை சுமார் 15 ஆண்டுகளாக “ஆபர்ச்சூனிட்டி” ஆராய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடுகளுக்கிடையே உறவுகள் விரிவடையும்

கண்காட்சி குறித்து அமெரிக்கத் துணைத் தூதர் ஜூடித் ரேவின் கூறியதாவது:- “உலகத்தை மாற்றி அமைப்பதற்கு நமது அமெரிக்க மற்றும் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ உள்பட விண்வெளித் துறையில் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து விரிவடையும் என்று நாங்கள் நம்புகிறோம். செவ்வாய் மற்றும் அதை தாண்டிய‌ எதிர்கால பயணங்கள் இதில் அடங்கும். மாணவர்களாகிய நீங்கள் எதை படிக்க விரும்புகிறீர்கள், எங்கு வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை பற்றி சிந் திக்க தொடங்கும்போது, விண்வெளி துறையில் உங்களுக்கு முன்னால் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய இந்த கண்காட்சி ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம். இதன் மூலம் உங்களில் பலர் விண்வெளி கல்வி மற்றும் பணி குறித்து உத்வேகம் பெறுவீர்கள் என்றும் நம்புகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்


No comments:

Post a Comment