தமிழக ஆசிரியர் கூட்டணி வாழ்த்தும் - பாராட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

தமிழக ஆசிரியர் கூட்டணி வாழ்த்தும் - பாராட்டும்!

சமூகநீதிக்கு காவல் அரணாக பகுத் தறிவுப் பகலவன் கண்டெடுத்து வார்த் திட்ட கொள்கை வைரமாக தமிழர் களின் தன்மானம் காத்திடவல்ல டிசம்பர் 2, 90ஆவது பிறந்த நாளில் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, தமிழக ஆசிரியர் கூட் டணி AIFETO  புலனப் பதிவின் மூலம் வணக்கத்துடன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துமடல்.

 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு இணை பெரியார் அவர்கள் தான்; காரணம் அவர்கள் பகலவன். ஆனால் அவரது அடிச் சுவட்டினை பின்பற்றி 90ஆவது வயதிலும் சமூக நீதியை பாதுகாப்பதற் காகவும், கல்வி, மொழி, இடஒதுக்கீடுக்கு எப்போதெல்லாம் பாதிப்புகள் வரு கிறதோ? அப்போதெல்லாம் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து வீதிக்கு வந்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற தலைவர் ஆசி ரியர் அய்யா அவர்கள் என்பதை கருத் தொருமித்து வழிமொழிந்து கொண்டிருக்கிறோம்.

சமூக நீதியின் அடையாள முக வரிக்கு தமிழ்நாட்டில் சொந்தக்காரராக வாழ்ந்து வருகிறார். இரண்டு முறை கரோனா பாதிப்புக்கு ஆட்பட்ட போதும், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி வந்து சமூக நீதிக்கு குரல் கொடுத்து கொண்டி ருக்கிறார் என்றால், ஆசிரியர் அய்யா அவர்களுக்கே அந்த பெருமை வந்து சேரும்!. மருத்துவம் அவரையும் அவரது துணைவியாரையும் காப்பாற் றியது என்றாலும், அவரைக் காப்பாற்றி மீண்டும் களம்காண வைத்துள்ளது அவருடைய ஓய்வறியா சமூகநீதித் தொண்டறம் என்பதில் பெருமிதம் கொள்வோம்!

1.12.2022 அன்று கூட ஆளுநர் அவர்களின் எதேச்சதிகார நடை முறைகளை எதிர்த்து புறநானூற்று போர் வீரனாக, ஒரு இளைஞனின் எழுச்சிக் குரலாக வீதியில் நின்று முழக்கம் இடுவதை காணுகிறபோது நம் நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்து போகிறது. பத்து வயதில் பகுத்தறிவு மேடைகளில் பேசத் தொடங் கிய இந்த குரல், இன்று 90வயதிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டி ருக்கிறது. சமூக நீதிக் கொள்கையினை பாதுகாப்பதற்கும் ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் குரலாகவும், புதிய கல்விக் கொள்கையினை தமிழ் நாட்டில் எந்தக் காரணத்தைக் கொண்டும் அமல் படுத்தவிடமாட்டோம் என்று உறுதி யுடன் எதிர்த்து நிற்பதற்கும் நூற்றாண்டு விழா ஆசிரியர் அய்யா அவர்களுக்கு கொண்டாட வேண்டும் என்று தந்தை பெரியார் கொள்கை வழியில் நின்று தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வணங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுவாக அரசியல் தலைவர் களுக்கு சிறப்பு பெயர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் "ஆசிரியர்" என்ற பெயருக்கு சொந்தக்காரராக வாழ்ந்து கொண்டிருப்பவர் 'ஆசிரியர் அய்யா அவர்கள் தான்' என்று சொல்லும்போது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது. மிக விரைவில் ஆசிரியர் அவர்களை நேர்முகமாகக் கண்டு வாழ்த்துகளைப் பெறுவோம்.

"எனது தாய் மண் விடியும் வரை என் தொண்டு தொடரும்" என்றே தாங்கள் விடுத்துள்ள போர்ப்பிரகடன அறிக்கை-கொள்கை வைரங்களின் இதயங்களில் பதிவாகியுள்ளன.

தொண்டு செய்து பழுத்தப்பழம் அகவை தொண்ணூறை தொட்டு விட் டார் சமூகநீதியினை நிலைநாட்டி, நல முடன், நூற்றாண்டும் இவர் காண வேண் டுமென இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ் கின்றோம். நன்றி.

No comments:

Post a Comment