நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துவதா? : நீதித்துறை எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துவதா? : நீதித்துறை எதிர்ப்பு

புதுடில்லி, டிச.29 உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் செயல்படாதவர்கள் பணியில் தொடர வாய்ப்பாக அமைவதுடன், தொடர் விளைவுகளும் ஏற்படும் என நீதித் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆகவும் உள்ளது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு கடந்த 2010-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

பின்னர் இது விவாதத்துக்கு எடுத் துக் கொள்ளப்படாமல் விடப்பட்டது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் பரிந்துரை எதுவும் அர சிடம் இல்லை என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரெஜிஜூ கடந்த ஜூலை மாதம் நாடாளு மன்றத்தில் அறிவித்து இருந்தார். 

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான சாத் தியக் கூறுகள் உட்பட நீதித்துறை செயல் முறைகள் மற்றும் சீர்திருத் தங்கள் பற்றிய விவரங்களை உள்ள டக்கிய அறிக்கை ஒன்றை ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித் துறை, பணியாளர் நலன், நீதித்துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு விடம் சமர்ப்பித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்து நீதித் துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதுடன் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். அதே நேரம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, செயல்படாத மற்றும் குறைவாகச் செயல்படும் நீதி பதிகள் பணியில் தொடர வழிவகுக்கும்.   ஓய்வு பெறும் வயதை அதிகரிப்ப தால், ஓய்வுபெற்ற நீதிபதிகளை தலைமை அதிகாரிகளாக அல்லது நீதித் துறை உறுப்பினர்களாகக் கொண்டி ருப்பதை தீர்ப்பாயங்கள் இழக்க நேரிடும். ஓய்வுபெறும் வயது ஒரு அடுக்கு விளைவை ஏற் படுத்தக்கூடும். ஒன்றிய மற்றும் மாநில அளவில் உள்ள அரசு ஊழியர்கள், பொதுத்து றை நிறுவனங்கள், ஆணையங்கள் போன்றவற்றில் இதே கோரிக்கையை எழுப்புவதால், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது ஒரு தொடர் விளைவை ஏற்படுத்தும். எனவே, இந்தப் பிரச்சினையை முழுமையாக ஆராய வேண்டும். இவ்வாறு நீதித் துறையின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment