இனமானப் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்களின் நூற்றாண்டு விழா ஒளிப்படக் கண்காட்சியை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

இனமானப் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்களின் நூற்றாண்டு விழா ஒளிப்படக் கண்காட்சியை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச. 18- திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், இனமானப் பேராசிரியர் 

க. அன்பழகனார்  நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப் பட்டுள்ள ஒளிப்படக் கண் காட்சியை 17.12.2022 அன்று திறந்து வைத்து, பார்வையிட் டார். 

பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகை யில் அமைக்கப்பட்டுள்ள இக் கண்காட்சியில், இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் இளமைக்கால ஒளிப்படங்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான ஒளிப் படங்கள், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறி ஞர் கலைஞர், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுடனான ஒளிப்படங்கள், பேராசிரியர் அவர்கள் அமைச் சராக பதவியேற்ற நிகழ்வுகள், பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்ட ஒளிப்படங்கள் மற் றும் இனமான பேராசிரியர் அவர்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான ஒளிப் படங்கள்  ஆகியவை இடம்பெற் றுள்ளன.   

இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெரு மக்கள், நாடாளுமன்ற உறுப் பினர் டி.ஆர். பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர் அவர்களின் மகன் அ. அன்புச் செல்வன், பேரனும் சட்டமன்ற உறுப்பினருமான அ. வெற்றி யழகன், ஒளிப்படக் கண்காட்சி ஏற்பாட்டாளர் கோவை சுப்பு மற்றும் பேராசிரியர் அவர் களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

சமூக வலைத் தளப்பதிவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந் நிகழ்வின் காட்சிப்பதிவுடன் சமூகவலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இனமானப் பேராசிரியரின் வாழ்வும் தொண்டும் கொண் டாடப்படவும் இளந்தலை முறைக்குக் கொண்டு செல்லப் படவும் தொடர் விழாக்களை நடத்துகிறோம்.

அதன் ஒருபகுதியாக, ஒளிப் படக் கலைஞர் கோவை சுப்பு ஏற்பாடு செய்துள்ள 3 நாள் சிறப்புப் ஒளிப்படக் கண்காட் சியை அண்ணா அறிவாலயத் தில் தொடங்கி வைத்தேன்.

-இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment