ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டாரில் இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவ வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டது  குறித்து, எப்போது சீனாவுடன் தேநீர் பேச்சு நடக்கும்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மெட்ரிக் மற்றும் பிற கல்வி உதவித் தொகைகளை எஸ்.சி மற்றும் ஓபிசி மாணவர்கள் அதிக அளவில் பெற தற்போது உள்ள ஆண்டு வருமான உச்ச வரம்பான ரூ.2.5 லட்சத்தை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. பணவீக்க விகிதத்தை மனதில் கொண்டு ஸ்காலர்ஷிப் தொகையை அவ்வப்போது திருத்தவும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மீதான நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தி டெலிகிராப்:

றீ ஓபிசி, சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை மோடி அரசு குறைத்துள்ளது குறித்து, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி கூறுகையில், சமீபத்திய திருத்தம் பல ஓபிசி மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தும். "உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை இப்போது 27 சதவீதத்தில் இருந்து 2035இல் 50 சதவீதமாக உயர்த்த அரசு இலக்கு வைத்துள்ளது. நீங்கள் ஓபிசி (பள்ளிக் குழந்தைகள்) உதவித் தொகையை திரும்பப் பெறும் போது (சுருக்கும்போது) அது எப்படி நடக்கும்?" என கேள்வி.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment