ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 14.12.2022

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்கிறது தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* ஈழத்தமிழர்களுக்கான நிவாரண உதவிக்கு ஜாப்னா தமிழர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மக்களவையில், எதிர்க்கட்சிகள் வேலை வாய்ப்பு, பணவீக்கம், விவசாய நெருக்கடி போன்ற பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. சிறுபான்மை மாணவர்களுக் கான மெட்ரிக் கல்வி உதவித்தொகை மற்றும் மவுலானா ஆசாத் பெல்லோஷிப் ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்றும், சிறுபான்மை சமூகங்கள் பின்தங்கியிருந்தால் நாடு எப்படி முன்னேறும் என்றும் பல நாடாளு மன்ற உறுப்பினர்கள் கேட்டனர்.

தி ஹிந்து:

* 2021-2022இல் மொத்தம் 3,744 முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன: 2020-2021இல் கலந்தாயவுப் பிறகு 1,425 முதுகலை இடங்களும், 2019-2020 இல் 4,614 இடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய நல்வாழ்வு அமைச்சர் மன்சுக் மாண்டவியா என்று மக்களவையில் தெரிவித்தார்.

* மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். உ.பி.யின் 4 மாவட்டங்களில் கோண்ட் சமூகத்தை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் மசோதா மீதான விவாதத்தின் போது, மற்ற சமூகங்களை ஏன் சேர்க்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர்.

தி டெலிகிராப்:

* அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4 சதவீதம் குறைந்து 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு ஆண்டில் 72 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது என்று சமீபத்திய தரவு காட்டுகிறது என்று திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா மோடி அரசுக்கு எதிராக சரமாரியான கேள்வி. இப்போது சொல்லுங்கள் யார் ‘பப்பு’ என்று கிண்டலும் அடித்தார்.

* 2025 பீகார் சட்டசபை தேர்தலில் தேஜஸ்வி மகா கூட்டணிக்கு தலைமை தாங்குவார் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment