மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, டிச.12 சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (டிச. 13) வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வரும் நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் மேல் தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் டிச. 12-ஆம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களிலும், வரும் 13, 14-ஆம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 15-ஆம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச. 12, 13-ஆம் தேதிகளில் (இன்றும், நாளையும்) லட்சத்தீவு பகுதிகள், கேரள, கருநாடக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். 


No comments:

Post a Comment