கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை அமைச்சர் பன்னீர் செல்வம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை அமைச்சர் பன்னீர் செல்வம்

சென்னை,டிச.12  கரும்பு விவசாயிகளுக்கு  சிறப்பு ஊக் கத் தொகையினை விரைவில்  வழங்க   நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளினால், 2020-2021 அரவைப்பருவத்தில் 95,000 ஹெக்டராக இருந்த கரும்புப் பதிவு, 2022-2023 அரவைப்பருவத்தில் 1,40,000 ஹெக்டேராகவும், கரும்பு அரவை 98.66 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 139.15 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.  2022-2023 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவித்த வாறு, ஒன்றிய அரசு 2021-2022 ஆம் அரவைப்பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான 

ரூ. 2775யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின்  சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ. 195 வழங்கிடும் வகையில், மாநில அரசு ரூ.199 கோடி நிதியினை மாநில  நிதியிலிருந்து வழங்கி வேளாண்மை உழவர் நலத்துறை ஆணையிட்டது.

2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு  ஊக்கத்தொகை வழங்கும் திட்டத் தினை  முதலமைச்சர் கடந்த 7ஆம்  தேதி துவக்கி வைத்தார். இதனைத்  தொடர்ந்து, 2021-2022 அரவைப் பரு வத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விபரத்தை சேகரித்து, கூர்ந்தாய்வு செய்து, சிறப்பு ஊக்கத்தொகையினை விரை வில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்க சர்க்கரைத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  

1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன்    

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக  ரூ.199 கோடி மதிப்பில் மாநில அரசு  வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையி னால், பொது, கூட்டுறவு மற்றும் தனி யார் சர்க்கரை ஆலைகளில் 2021-22 அரவைப்பருவத்தில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,950 கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 1.21  லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில்  எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்  தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment