சென்னை, டிச.12, மாண்டஸ் புயல் எதிரொ லியாக, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தின சரி மின்சார தேவை மிக வும் குறைந்தது. தமிழ் நாட்டின் தினசரி மின் சார தேவை 14 ஆயிரம் மெகா வாட் ஆக உள் ளது. கோடை காலத்தில் இந்த அளவு 17 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு அதிகரிக்கும். இந்நிலை யில், தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரண மாக டிச.9 பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியது. இதன் காரண மாக சென்னை மற்றும் பல் வேறு மாவட்டங் களில் குளிர்ந்த வானிலை நிலவியது. குளிர்ந்த வானிலை காரணமாக தமிழ் நாட் டில் மின்சார தேவை மிகவும் குறைந் தது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால், தமிழ்நாட்டில் 9.12.2022 அன்று 6300 மெகா வாட் மட்டுமே பயன்படுத்தப்பட் டுள்ளது. இதற்கு முன்ன தாக கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6490 மெகா வாட் மின் சாரம் பயன்படுத்தப் பட்டு இருந்தது.
இதைப்போன்று சென்னையிலும் மிகவும் குறைவான மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள் ளது. இதன்படி சென் னையில் 9.12.2022 அன்று இ ரவு 9 மணிக்கு 2200 மெகா வாட்டாக இருந்த மின்சார பயன்பாடு நள்ளிரவுக்குப் பின் 1 மணிக்கு 753 மெகா வாட் டாக குறைந்தது.
No comments:
Post a Comment