10 கவுன்சிலர்களை பிஜேபிக்கு இழுக்க டில்லியில் 100 கோடிரூபாய் பேரம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

10 கவுன்சிலர்களை பிஜேபிக்கு இழுக்க டில்லியில் 100 கோடிரூபாய் பேரம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச. 12, டில்லி மாநகராட்சி தேர் தலில் மொத்தம் உள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி 134இல் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 104 இடங்களில் வென்றது. இந்நிலையில், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கூறியதாவது:

டில்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கவுன்சிலர் களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் கட்சியின் கவுன்சி லரான டாக்டர் ரோ னாக்சியை யோகேந்திர சந்தோலியா என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, பாஜக மாநில தலைவர் ஆதேஷ் குமார் குப்தா, ரோனாக்சியுடன் பேச விரும்புவதாகக் கூறி யுள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகும் 10 கவுன்சிலர் களுக்கு ரூ.100 கோடி தரத் தயாராக இருப்பதா கவும் கூறியுள்ளார். இது தவிர, மேயர் தேர்தலின் போது கட்சி மாறி வாக்களிக்க ஆம் ஆத்மி கவுன்சிலர்களுக்கு ரூ.50 லட்சம் தருவதாக பேரம் பேசி உள்ளனர். 

இதுகுறித்து சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்குமாறு டில்லி காவல்துறை ஆணையரிடம் புகார் செய்துள்ளோம். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின் போது, ஆம் ஆத்மி கவுன் சிலர்களான டாக்டர் ரோனாக்சி, அருண் நவா ரியா மற்றும் ஜோதி ராணி ஆகியோர் உடன் இருந்தனர். 

இதனிடையே, முதலில் பணம் வாங்கிக் கொண்டு டில்லி மாநக ராட்சி தேர்தலில் போட் டியிட வாய்ப்பு வழங்கிய ஆம் ஆத்மி கட்சி, இப் போது கவுன் சிலர் களை விலைக்கு வாங்க முயற் சிப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

No comments:

Post a Comment